Saturday, 4 February 2012

கோமாளிகளின் உளறல கூடாரமான இலக்கிய விழா!

  இது சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு "இயல்" விருது வழங்கும் விழா பற்றியது!
சாதாரணமாக இலக்கியவிழா என்றால் ஒரு மூத்த எழுத்தாளர்,அந்த பதிப்பக உரிமையாளர்களுக்கு தெரிந்தவர்கள்(வேறு துறையிலும் இருக்கலாம்.உம்.,நல்லி குப்புசாமி போன்றோர்),எழுத்தாளருக்கு வேண்டியவர்கள்(அப்படின்னா அவரின் எழுத்தை படித்தவர்களாகவே இருப்பர்).
   நம்ம மனுஷ்ய புத்திரன் அண்ணாத்த பாணியே தனி!குசுபுவை ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு சொல்லி கடைசியில் அவர் வரவில்லை!ஏன் ஒரு நடிகையை கூப்பிட்டீர்கள் என்றால் அவர் கற்பு என்னும் தலைப்பில் பி.ஹெச்.டி வாங்கி உள்ளாராம்!இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறதோ என்ற ஐயம எழாமல் இல்லை!
     அதுவும் பாரு நிவேதிதா போன்றோர் தமது புத்தக விழாக்களை ஒரு சினிமா பட வெளியீட்டு விழா ரேஞ்சுக்கு ட்ரைலர் சகிதம் வெளியிடுவது இதன் தொடக்கமாகவே நாம் பார்க்க வேண்டும்!அது தவிர இவரின் பேனருக்கு பீர் அபிஷேகம் போன்ற கோமாளித்தனங்கள் வேறு நடைபெற்றது!இதில் irony என்ன்னவெனில் இதே பாரு தான் நடிகர்களை கடுமையாக விமர்சித்தவர்!சினிமாவை விமர்சித்தவர்!குறிப்பாக தமிழகத்தை விமரிச்ப்பவர்(எக்சைல் விமர்சனம் காண்க).ஆனால் இவர் செய்வது என்ன?இவர் கண்டித்த அதே கோமாளிதனங்களைதான்! ஆர்குட்டில் கமல் குழுமத்தில் அவரை ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள்!கமலை கடுமையாக விமர்சனம் செய்யும் பாரு இவரது வாசகர் வட்டத்தில் நடை பெறுவதும் ஒரு வித தனி மனித தொழுகை என்பதை உனாராமல் போனது ஏனோ!சரி அதை விடுங்க!மேட்டருக்கு வரேன்(மேட்டரா?வீடியோ லிங்க் சீக்கிரம் குடு என கேட்பவர்கள் எக்சைல் நாவலை நூறு முறை படிக்க வேண்டும்)
                இந்த இயல் விருது வழங்கும் விழாவில் தமில்(ஆமா இவருக்கு ழ வேற போடணுமா?)  எழுத படிக்க தெரியாத ஆனா ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன தங்க காசு வாங்கி பெட்டி பெட்டியா சொத்து சேர்த்த "வருங்கால மொதல்வர்" என தனக்கு தானே ஒரு பில்டப்பை உண்டாக்கி அது உடைந்தவுடன் "நான் எப்போ அரசியலுக்கு வரேன்னு சொன்னேன்"?"அது அந்த பட டைரக்டர் வச்ச டயலாக்"!என மொக்கையான மழுப்பலை(சரி பாட்ஷா பட வெற்றி விழாவில் அம்மையாரை எதிர்த்து பேசுநீங்களே அது எந்த டைரக்டர் எழுதி கொடுத்தார்?1996 இல் திமுக-தமக கூட்டணிக்கு ஆதரவா சன்  டிவியில் வாய்ஸ் கொடுத்தது எந்த டைரக்டர் பேச சொன்ன வசனம்?) கூறிய ரசினிகாந்துதான் அந்த விருந்தினர்!
              அண்ணாத்த வழக்கமா  எந்த விழாவுக்கு போனாலும் குட்டி கதை(ஒரு "புட்டி" போட்டுட்டு பேசுராரோன்னு எப்பவுமே சந்தேகம் கொள்ள வைப்பார்) சொல்வது வழக்கம்("குட்டி" கதைன்னா short கதை!சகீலா குட்டி கதை இல்லை!).நடு நடுவுல கடவுள் இமயமல மறுபிறவி குருஜி பாபா அரசியல்   போன்ற வார்த்தைகளை போட்டுக்கணும் (குணா பாடல் போல) இப்படி போட்டு பேசுனா நீங்களும் ரஜினிதான்!
             இப்போது நடந்தது என்ன?இயல் விருது வழங்கும் விழா!

 எஸ் ராமகிருஷ்ணன் என்கிற எழுத்தாளரை பற்றி சொல்லாமல் தொடர்வது நியாயமாகாது!இவர் சாகசங்களை விரும்பாதவர்! ரஜினி கமல்(தொடங்கி   பவர்ஸ்டார்- சாம் ஆண்டர்சன்  ஜோடி வரை  ) மோதல் போல இரு எழுத்தாளர் மோதலை தானே உருவாக்கி அதில் பிரபலமானவர் அல்ல இவர்!ஓவர்நைட்டில் பிரபலமானவர் அல்ல இவர்!தனக்கென்று ஒரு வானர சேனையை உருவாக்கிக்கொண்டு அதை ஏவி விட்டு எதிராளிகளை காலி செய்வது வசை பாடுவது போன்ற கோமாளிதனங்களை செய்யாதவர்!இதற்கு சாட்சி அவரது இணையதளமே! மற்ற எழுத்தாளர்களின் இணையதளத்திற்கும் இவரின்  தளத்திற்கும் வேறுபாட்டை பார்த்த உடன் உணரலாம்!மற்றவர்கள் எதிராளிகளை பந்தாடவே பாதி சர்வர் இடத்தை அடைத்து கொண்ட வேளையில் இவரோ உலக இலக்கியம் உலக சினிமா தமிழ்  சினிமா தமிழ் எழுத்தாளர்கள் இந்திய இலக்கியம் என எழுதி கொண்டிருப்பவர்!தானுண்டு தன் வேளை உண்டு என்பதுதான் இவரது ஸ்பெஷல்!
                ஆனால் இந்த விழாவுக்கு வந்த ரசினி காந்து பேசியவை என்ன?சில சாம்பிள்கள்
***********************************************************************************
:
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
(சரி அதுக்கும் இந்த விழாவுக்கும் என்னைய்யா சம்மந்தம்?எஸ்.ரா உபபாண்டவம் என மகாபாரதத்தை மையபடுத்தி எழுதினர் அதுவாவது உங்களுக்கு தெரியுமா?)


இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!

(இது எதை சொல்ல வராருன்னே யார்க்கும் புரிந்திருக்காது என்பதில் சந்தேகம் இல்லை)


எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.

(சரி!நீங்க அதுக்கு என்ன செய்ய போறீங்க?வெறும் lip service தானா?இதை பாரு நிவேதிதா உங்களை விட அதிகமாகவே செய்து வருகிறார்.எவ்வளவோ நல்ல இலக்கிய சிற்றிதழ்கள் உள்ளன!நீங்க அவைகளுக்கு ஸ்பான்சர் பண்ணலாமே நல்லி குப்புசாமி போல!)


  ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட...

 (எங்களுக்கே செம டர்ர் ஆதான் இருந்தது!)

எல்லாம் அறிஞர்கள் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் என்பது பரசுராமன், கர்ணனுக்கு கொடுத்த சாபம். அதுபோல இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை.

(இவுரு கர்ணனா?கர்ணன் அளவுக்கு தானங்கள் இவர் செய்திருந்தால் பல நூறு கோடி சொத்து இன்னும் இவுரு பாக்கெட்டில் இருக்கே அது ஏன்?)

எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது.
 (இதுக்கு சி.பி.ஐ இல் இருந்து ஆபீசர்ஸ் வந்துதான்  கண்டுபிக்கனுமா?அதான் ஊருக்கே தெரியுமே!ஒரு மொழி கூட உருப்படியா தெரியாத இவுருதான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த கோமானாம்!நீங்க மட்டுமல்ல அடுத்த மாநிலத்தில் இருந்து பொழைக்க வந்த நடிக கூட்டமும் இங்கியே குப்பை கொட்டிய நடிகர் கூட்டமும் இப்படிதான் ரெபிடக்ஸ் மட்டும் படித்துவிட்டு இன்குலீசில் அரைகுறை பீட்டர் விட்டுகொண்டிருக்கின்றனர்!)

துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது
 (அப்போ "யோச்க்காம பேசமாட்டேன் பேசுனப்புரம் யோசிக்க மாட்டேன்" என்றீர்களே !அப்போ எப்பவுமே கஷ்டத்தில்தான் உள்ளீர்களா ?உச் உச் !!)


இருந்தாலும், அந்த புத்தகத்தில்(இவரது வாழ்க்கை வரலாறு) உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை

 (ஆமா அதனாலதான தலிவா நீங்க அரசியலுக்கே வரல)

சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை

(என்ன பாஸ் ஒரு மொழியும் உருப்படியா தெரியாதுன்னு இப்பதானே சொன்னீங்க!இது எந்த மொழி புத்தகம்?)

படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார்

(இறைவனும் ஒரு படைப்புதானே?அப்போ படைப்பாளி யார்?)
************************************************************************************

 ரொம்ப கொழப்பாமாதான் இருக்கும்!ஒரு கட்டிங் அடிச்சிட்டு படுக்கவும்!அடுத்து "தமிழ் புலவர்" தனுசை
கூப்பிட்டு ஒரு இலக்கிய விழா நடத்தவும்!சூப்பரா இருக்கும்!

Wednesday, 1 February 2012

டோரா,பைபிள் மற்றும் குரானில் ஒரு காமன் சந்தேகம்!

ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் 

-ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
 

-அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!

-அன்றேல் ஏவாள்  தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா?