Monday 18 June 2012

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் 1b

சென்ற பஸ் ஸ்டாப்பில் கேட்கபட்ட எடக்கு மடக்கான கேள்வி போன்று இப்போதுஇன்னொன்று:

    கலைஞர் என்றால் என்ன?இவர் என்ன இசை கலைஞரா?நாடக கலைஞரா? நடன கலைஞரா? கூத்து கலைஞரா? தப்படிக்கும் கலைஞரா? கரகாட்டம் ஆடும் கலைஞரா? இந்த பட்டம் இவருக்கு "வழங்கப்பட்டதா"?இல்லை இவரே வைத்து கொண்டதா?

*****************************************************************************

வெங்கட் பிரபு அடுத்த படம் பிரியாணி-a VenkatPrabhu diet...ஆம்...
இது போல வேறு என்னென்ன பெயர் வைக்கலாம்(உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள்..சும்மா ஜாலிக்கு...
பினாயில் -a venkatprabhu wash room
வித்தவுட்- a venkatprabhu journey
மொக்கை ப்ளேடு-a venkatprabhu saloon
கிங்க்பிஷர்-a venkatprabhu wine shop
டீ பார்டி -A venkatprabhu politics

*****************************************************************************
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நம் நாட்டில் இல்லையென்று யார் சொன்னது?அரசு அலுவலர்களிடம் ஒரு வேலையாக சென்று பாருங்கள் ...நன்றாக விளங்கும்
*****************************************************************************
எம் ஆர் ராதா பற்றி ஒரு பேச்சு எழுந்த போது அவர் Edward G Robinson என்ற நடிகரின் உடல்மொழிகளை பின்பற்றினார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.எட்வர்ட் ராபின்சன் என்றாலே பலருக்கும் டென் கமன்ட்மேன்ட்ஸ் தான் தெரியும்.அவர் முன்பு ஓஹோவென கோலோச்சிய 1930 களில் ஹீரோவாக நடித்தார்.அப்போது அவர் நடித்த Little Caesar,Smart Money குறிப்பாக A slight case of murder பார்த்தீர்களானால் வில்லத்தனம் கலந்த காமெடி செய்திருப்பார்.இந்த படம் வந்த வருடம் 1934.