Tuesday, 14 August 2012

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் 1c

ரொம்ம்ப வருடம் கழித்து ஹாக்கி மேட்ச் டிவியில் பார்த்தேன்.ஆஸ்திரேலியா-ஜெர்மனி மேட்ச் செம த்ரில்.
ஜெர்மனி  ஒரு கோல் அடிக்க அது கோல் இல்லை என நண்பனிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே ஆஸ்திரேலியா அப்பீல் செய்ய கோல் இல்லை...(ஹாக்கி விதிகளில் முக்கியமானது ஸ்டிக்கை தோளுக்கு மேல் தூக்கவே கூடாது).எனக்கு சரியான tactics கள் விதிகள் பெரும்பாலும் எதுவுமே சொல்லி கொடுக்காமல் எப்போ பார்த்தாலும் "ஆட்டு கூட்டம் மாதிரி கூடி நிக்காதீங்க" என்று மட்டுமே கத்தி கொண்டிருந்த ஹாக்கி கோச் மீது செம காண்டு வந்தது.மொதல்ல அவனுக்கு ஹாக்கி தெரியுமா?அப்புறம் தானே எங்களுக்கு சொல்லி கொடுக்க??ஏதோ instinct படி விளையாடினோம்...அது பல வருடங்களுக்கு முன். ஓரளவுக்கு ட்றிப்ளிங் ச்கூப்பிங் டேப்பிங் டாட்ஜிங் தெரியும்.கிரிகட் விளையாடுவதை விட மிக கடினமான பயிற்சி ஹாக்கிக்கு...முதலில் 400m கிரவுண்டில் நாலு ரவுண்டு..அப்பால இன்னர் சர்கிள் 200m எட்டு ரவுண்டு அப்பால அரை கிரவுண்டுக்கு மேலே சொன்ன ஒவ்வொரு டெக்னிக்கையும் பின்பற்றி சென்று திரும்பி வர வேண்டும் அப்பாலதான் மேட்ச் விளையாடலாம்...பெண்டு கழன்டுவிடும்.கால்கள் கட்டை போல ஆனதால் நான் பேட் வேண்டாமென சொன்னது நினைவில் உள்ளது.காலில் டஃப் பால் அடிபட்டு பட்டு இப்போது எதை கொண்டு அடித்தாலும் வலி இல்லை... ******************************************************************************   தலைவர் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் ஒரு சிட்டி கெட்டப்பில் ஸ்டைலாக நடித்த படம் என்பதற்காகவே பார்த்த படம் ஜக்குபாய்...இது வாசாபி பட உல்டா என்பது தெரிந்ததுதான்...2004 இல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ரஜினி முக்காடு போட்டு உட்கார்ந்திருந்த ஸ்டில் நினைவுக்கு வந்தது,.பா ம க வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து நாற்பதும் திமுக- பாமக உள்ளிட்ட மெகா கூட்டணிக்கு சென்றுவிட பாமக காரர்கள் ரஜினி=நாமம்(வரைந்திருந்தனர் பேருந்துகளில் ) மற்றும் முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்துவிட்டார் என கேலி செய்ய படம் டிராப்...
ரஜினியுடன் பிரபலமாகாவிட்டாலும் போட்டியிடும் சரத்குமார்(சந்திரமுகியில் நயன்தாரா நடிக்க போறார்னு தெரிந்ததும் அதற்கு முன்பே பொங்கலுக்கு ஐயா ரிலீஸ் செய்தார் சரத்).சரி ஜக்குபாய்க்கு வருவோம்...படத்தில் மிக நீண்ண்ண்ட இடைவேளைக்கு பின் தலைவர் கவுண்டர் சிட்டி கெட்டப்பில் அசத்தி இருந்தார்.மான் கி ஹெட் சிச்லர் என எதையோ தின்ன ஸ்ரேயா அது மான் கி இல்ல மங்கி ஹெட் சிச்லர்=கருங்குரங்கு தலை என சொல்ல கவுண்டர் அடிச்சாரு counter "ஆமா நம்ம ஊருல மட்டும் தெரிஞ்சிதான் தின்னுரானுங்களா?எதையோ ஆர்டர் செய்ய எதையோ கொண்டு வர எதையோ தின்றாங்க" என ரிவிட் அடிக்கிறார் தல.இவர் இதுபோல நிறைய சிட்டி கெட்டப்பில் நடிக்க வேண்டும்.சரத் கூட இனைந்து சண்டை எல்லாம் போடுகிறார் இங்க்லீஸ் பேசுகிறார்...அப்பால ஒரு வெள்ளை காரன் தலைவரை திட்டுகிராபன்(மவனே நீ வடக்குபட்டிக்கு வந்த தீர்ந்த...)..ஆனாலும் வயதுக்கு தகுந்த வேடத்தில் நடித்த சரத்தை பாராட்டலாம் .படம் நன்றாகவே பொழுது போக்கியது.எங்கடா கே எஸ் ஆர் ஐ காணோம்னு நினைத்தால் கடைசி நிமிடத்தில் இமிக்ரேஷன் ஆபீசராக வந்து முத்திரை பதிக்கிறார்.