Thursday, 18 October 2012

Godmother An Italian Mafioso ஒரு கற்பனை

இங்கு  எழுதப்பட்ட அனைத்தும் கற்பனையே.... வெறும் நகைச்சுவைக்காக...
 *******************************************************************************
இடம்: பானியா பூந்தி இல்லம்.
வெளியில் பண்ணா பசாரே பாந்தி பஜனை செய்து கொண்டே உண்ணா விரதம் இருக்க அதை கண்டுகொள்ளாமல் மக்கள் உள்ளும் வெளியும் வந்து செல்கிறார்கள்.
பானியா அலுவலக அறை
கபாமா: ஐ பிலீவ்ட் இன் போங்கிரஸ்.....கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கப்படாமல் தடைபட்டபோது உண்மை குடிமகன் போல நீதிமன்றம் சென்றேன் ஒன்றும் நடக்கவில்லை.இனி நான் என்ன செய்வேன்...அழுகிறார்...
பானியா சைகை மூலம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்க சொல்கிறார் 
தண்ணீரை விழுங்கி  விட்டு தொடர்கிறார்...
கபாமா: நானும் கல்லறை வரத்தகத்தில் இருக்கும் மொதலாளிகளிடம் கை நீட்டி கமிஷன் வாங்கிட்டேன்..இப்போ அவர்கள் என் கழுத்தில் துண்டை இறுக்குகிறார்கள்.நீங்கதான் உதவணும் மேம்...
பானியா: நீங்கள் முதலில் நீதிமன்றம் சென்றீர்கள் என்றால் இங்கு ஏன் வர வேண்டும்?
கபாமா: அது வந்து....(பானியா கையமர்த்துகிறார்)
பானியா: தவிர என்னை மேம் என்று அழைக்கிறீர்கள்...காட்மதர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம கூட உங்களுக்கு எழவில்லையே...
கபாமா: விழிக்கிறார்...சாரி மேம் ...ஓ...சாரி காட்மதர்.
பானியா: ம்....சரி நீங்க போங்க நான் பார்த்துகொள்கிறேன்
கபாமா வெளியேறுகிறார்....
பானியா தனது consigliere பகமது குட்டேலை அழைக்கிறார்...
பானியா: இந்த வேலையை சிவகங்கை சீமானிடம்....வேண்டாம் மைக் மோகனிடம் கொடுங்கள்.மைக் மோகன் எங்கே வர சொல்லுங்கள்...

********************************************************************************
இடம்: மைக் மோகன் ஒபீசு.
கபாமா அங்கு வர போவதாக தகவல் வந்ததும் பதட்டமடைகிறார் மைக்..
கபாமா உள்ளே வர மைக் மோகனை நாலு பேர் தூக்கி கொண்டு வருகிறார்கள்...
ஓ ஓம் நமோ கபாமாய நமஹ...
இந்தியாவை மட்டும் கண்டால் அமேரிக்கா தெரியாது 
அமெரிக்காவை மட்டும் கண்டால் உலகமே தெரியுது 
பஞ்ச அக்ஷரம் (Kabama) ஏற்கும் நெஞ்சம் 
வேறு எந்த அக்ஷரத்தையும் ஏற்காது.
கபாமா என்ட்ரி கபாமா: இன்னா  மேன் இது?
மைக்மோகன் :அடியேன் அமெரிக்கதாசன்.
மைக்:வாங்க எசமான்
கபாமா: இன்னா மேன் எதுக்கு இந்த அமர்க்களம்?
எசமான் வரதா இருந்தா என்ன வேணும்னா செய்ய தயார்.
கபாமா: கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு சம்மந்தமா உங்களை பார்க்க சொன்னார்கள் காட்மதர்.
மைக்: காட்மதர் சொன்னா மறு பேச்சு ஏது? நான் முடிச்சு கொடுக்கிறேன்.
சிலர் வீட்டு வெளியில் பண்ணிய முதலீட்டை தடை செய் என போராடுகின்றனர்.
கபாமா: இன்னா மேன் உங்க கூட்டணி வாபஸ் வாங்கிட்டா ஆட்சி கவுந்துடும்னு சொல்றாங்க.
மைக்: அதெல்லாம் இல்லை எசமான் பாயாவதி மற்றும் கலாயம் போன்ற அடிமைகள் சிக்கி இருக்கும் போது நமக்கென்ன கவலை?நீங்க போங்க நான் பார்த்துகிரேன்.
*********************************************************************************
இடம்: பானியா அலுவலகம்.
மைக் மோகனை வர சொல்லி இருக்கிறார் காட்மாதர்
குழந்தை கூகுள் கிலுகிலுப்பை வைத்துக்கொண்டு கீழே விளையாடி கொண்டிருக்கிறான்
மைக் மோகன அவசரமாக உள்ளே நுழைய முயலும் பொது கூகுள் மைக்கின் பேண்டை பிடித்து இழுக்கிறான்..

மைக்:அரே இன்னா சோட்டா காட்பாதர்?
கூகுள்:வெல்யாடு வெல்யாடு
மைக்: அரே விளையாட இது நேரமில்லே..
தரையில் உருண்டு அழுகிறான்
மைக்: இவனே நமக்கு உலை வச்சிடுவான் அது நிச்சயம்.விளையாடுகிறார்.
பத்து நிமிடங்கள் ஆகி விடுகிறது.
மைக்: அரே பத்து நிமிஷம் ஆகிபோச்சு..காட்மதர் லெப்ட் அண்ட் ரைட் வான்குவாங்கோ என ஓடுகிறார்
கூகுள் தரையில் உருண்டு சிரிக்கிறான் 
பானியா: இன்னா மேன் லேட
மைக்: அது வந்து கூகுள்..
பானியா: ஓ கமான் எதற்கெடுத்தாலும் கூகுளை குறை சொல்வது பழக்கமாகிடுச்சு. நல்லதுக்கில்ல.
சரி கல்லறை வர்த்தகத்தில் பண்ணிய முதலீடு அனுமதிக்கும் விஷயமா  கபாமா வந்தாரா?
மைக்: வந்தார் காட்மதர்.
பானியா: சரி ஆக வேண்டியது பாருங்க ஏதாவது உதவி வேணும்னா ககமது குட்டேலை கேளுங்க
மைக்: அது வந்து ஆதரவு வாபஸ்னு சாயாவதியும் கலாயமும் மிரட்டுறாங்க
பானியா: சரி அதுக்கு போங்க்ராஸ்  பீரோவை வச்சி பிரச்னையை முடிச்சிடலாம்.

குறுக்கே பல்மான் பர்ஷித் அரிவாளுடன் குறுக்கே மிரட்டியபடி செல்கிறார்...டாய்ய் கீஷிடுவேன் ....பஜ்ரிவால் பம்மிகொண்டே ஒளிந்து கொள்கிறார்.
பானியா: பல்மான் என்ன இதெல்லாம்?
பல்மான்:காட்மதர்.... அது.... வந்து.... ஒருத்தன் எனது  குடும்ப விவகாரங்களை அம்பலபடுத்துகிறான்.அதான்
பானியா: அதுக்கு இப்படிதான் பொது இடத்தில் நடந்து கொள்வீர்களா?சத்தமில்லாமல் பிரச்னையை முடிக்க என்னிக்குதான் கத்துக்க போறீங்களோ..
காபட் பதாரா வருகிறார் 
காபட் பதாரா:காட்மதர் பீ எல் எப் விவகாரம் பற்றி பஜ்ரிவால் பிரச்னையை கிளப்புகிறார்.
பானியா: தனது consigliere ககமதுவை பார்த்து யார்அந்த பஜ்ரிவால்?
ககமது: காட்மதர் அவர்தான் உங்களது  குடும்ப விவகாரங்களை தினம் ஒன்றாக நாறடிக்கிறார்.
பானியா: நல்லதுக்கில்ல.பக்விஜய் பங்கைவர சொல்லுங்கள்.
பக்விஜய் வருகிறார்.
பக்விஜய்: காட்மதர் அவர்களுக்கு எனதுவணக்கம்.
பானியா: இந்த  பஜ்ரிவால் ரொம்ப பிரச்சனை செய்கிறார்.
பக்விஜய்: கவலை படாதீங்க.சென்ற வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி லாண்டரி பில்லு பத்து ரூவா பாக்கி,1978 இல் ஒக்டோபர் ஐந்தில் ஒரு ரூபாய் டீ கடை பாக்கி, 1966 இல் ரயிலில் வித்தவுட்டில் வந்தபோது எடுத்த படம் எல்லாம் இன்னிக்கே ப்றேச்சுக்கு கொடுத்துடுரேன்.
பானியா: குட ஜாப் யூ கேன் கோ
பக்விஜய்: அச்சா காட்மதர்ஜி.

Thursday, 11 October 2012

தொடர் மின்வெட்டு நடிகர்களின் ரியாக்சன்(ஒரு கற்பனை)-பாகம் 2

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுபட்ட நடிகர்கள்இரண்டாம் பாகத்தில்.
முதலில் விஜய்:
நமது நிருபர் அவரை சந்திக்க செல்லும்போது ஐரோப்பாவில்  ஷூட்டிங்கில் இருக்கிறார்'நீ அடிச்சா அடி விழும் நான் அடிச்சா இடி விழும் என்று யாரையோ மிரட்டி கொண்டிருந்தார்...அருகில் சென்றோம்


"அண்ணா என்னங்க்னா?"
இந்த  மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?
அண்ணா வேனாக்னா பன் பிக்சர்ஸ் மிரட்டியதால் சென்ற ஆட்சியில் எதிர் கட்சிக்காக சூலாயுதம் படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிட்டேனுங்க்னா...இப்போ இவுன்களை எதிர்த்து பேச என்னால முடியாயதுங்கா நீங்க கெளம்புங்க...
என்று சொல்ல நமது நிருபரே எழுதிய வசனம் " மின்சாரத்தை நிருத்தனும்னு ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவுங்க பேச்சை அவுங்களே கேக்க மாட்டாங்க"

விஜயகாந்த்:
இருளில் அவரது திருமண மண்டபம்.கேப்டன் பிரபாகரன் க்ளைமாக்ஸ் போல எல்லாரும் தலையில் ஒரு பிளாஷ் லைட் கட்டி கொண்டு நிற்க தனது உதவியாளர் ஒருவரை வெளுத்து கொண்டிருந்தார் "டேய்...ஒன்ன உள்ள தூக்கி போட்டு அடிச்சா  உடுமலைபேட்டைல இருந்து கூட போன் வராதுடா...ஆங்"
நமது நிருபர் உள்ளே நுழைய "டேய் யாருடா நீ?உளவு பாக்க வந்தியா" என நாக்கை மடித்து முஷ்டியை உயர்த்துகிறார்.
ஐயோ இல்ல சார் நான் நிருபர்
ம்...அதை மொதல்லையே சொல்ல கூடாதா அடி வாங்கியிருப்ப நீ...
சரி என்ன விஷயம்?
இந்த மின்வெட்டு பத்தி உங்கள் கருத்து?

டேய்...தமிழ்நாட்டுல மொத்தம் 39 மின் உற்பத்தி நிலையம் இருக்குடா அதில் 38 பல வருசமா பாழடைஞ்சு போய் சினிமா க்ளைமாக்ஸ் எடுத்துகினு இருக்காங்க.மீதி இருக்கும் ஒரு மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவாட் உற்பத்தி பண்ணுது.அதில் 299 மெகாவாட் சென்னைக்கு மீதி ஒரு மெகாவாட் பிற மாவட்டங்களுக்கு...தமிழ்நாட்டில் மொத்தம் 12587 டிரான்ஸ்பாமர் இருக்குடா அப்புறம் 65377 மின் கம்பங்கள் இருக்குடா அதில்...
நிருபர் தொடர் எண்ணிக்கை புள்ளி விவரங்களால் குழம்பி வெளியேறுகிறார்.

சரத்குமார்:
"டேய் என்றா பம்முற?விசயத்த சொல்லு"
அய்யா நிலத்துக்கு தண்ணி பாய்ச்ச பம்புசெட்டுக்கு கரண்டு வரலீங்கையா...
"என்றா அதுக்கு என்னடா பண்ண சொல்ற?ஒம்பாட்டன் முப்பாட்டன் எல்லாம் எந்த பம்பு செட்டடா நம்புனான்?எகத்தாளம் வேறையா?"


திடீரென்று செல்போன் ஒலிக்க பேசுகிறார்...
ஹலோ ஜீ நீங்களா?(இடுப்பில் துண்டை கட்டி கொண்டு பவ்யமாக பேச தொடர்கிறார்)
ஆமா ஜி சிலர் கேள்வி கேக்குறாங்க 
ஓகே ஜி 
இல்லை ஜி நானே சமாளிச்சுகுவேன்.முடியலைன்னா சொல்றேன் ஜி..
ஓகே ஜி 
என்றா எகத்தாளம் பேசுன அத்தன போரையும் ஊரை விட்டு தள்ளி வைக்குரேன் அவனுங்களுக்கு ஆரும் தண்ணி குடுக்க கூடாது ஆரும் செல்போன் சார்ஜ் பண்ணி தர கூடாது ஆரும் மின்சாரம் தர கூடாது
(மக்கள் முனுமுனுத்துகொண்டே இப்போ மட்டும் என்ன வாழுதாம்? என்று கலைகின்றனர்).

சந்தானம்:
ஊருக்குள்ள பத்து பதினஞ்சு இன்வர்டர் வச்சிருக்குறவனெல்லாம் நல்லா இருக்கான் ஆனா   ஒரே ஒரு இன்வர்டரை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே...அய்யூ...அய்யூ...அயூ


வடிவேல்:
பாவம்யா தமிழ்நாட்டு மக்க
எம்புட்டுஅடிச்சாலும் தான்குராய்ங்க இவிங்க ரொம்ப நல்லவங்கே...
ஆனா  என்னால எம்புட்டு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியுது?
என்ன உட்டுடுங்க சாமீ...என்று மூத்திர சந்துக்கு ஓடுகிறார்
ஹலோ போன வாரம் அடிக்க வரதா சொன்னீங்க...
Wednesday, 10 October 2012

தொடர் மின்வெட்டு நடிகர்களின் ரியாக்சன்(ஒரு கற்பனை)

ஒரு நாளைக்கு நாப்பத்தெட்டு மணி நேர மின்வெட்டு...பெட்ரோமாக்ஸ் லைட் வாங்கினால் இரண்டு தீப்பந்தங்கள் கொடுக்கும் காலம்.தொடர் மின்வெட்டினால் நடிகர்கள் என்னாகிறார்கள்?அவர்கள் ரியாக்சன் என்ன?ஒரு கற்பனை:
முதலில் ரஜினிகாந்த்:

கண்ணா இனி நீ ஒரு நாளைக்கு அம்பது மணி நேரம் கூட நிறுத்திக்க...எனக்கு கவலை இல்லை..ஆ...பாபாஜிகிட்ட போறேன் இமயமலைக்கு.... ஜென்மத்துக்கு இங்கே திரும்பி வர மாட்டேன்...ஆ...(துண்டை போர்த்தி கொண்டு போகிறார்...விடுகதையா இந்த வாழ்கை பாடல் பின்னணியில் ஒலிக்கிறது)
(மனதிற்குள் "ஆண்டவா தமிழ்நாட்டிடம் இருந்து உன்னை நீயே காப்பாற்றி கொள்")

கமல்ஹாசன்:
எல்லாம் மின்சார மாயம் என்று சொன்னீர்களே
ஆனால் என் வாழ்வில் எல்லாம் பயமயம்
மிக்சியில் துவையல் அரைக்கும் போது  மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
கிரைண்டரில் மாவாட்டும்போது மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
வாசிங் மிஷினில் துணி வெளுக்கும் போது மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
டிவியில் படம் பார்க்கலாம் என்றால் மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
எல்லாத்துக்கும் மேலாக கழுவ தண்ணீராவது வேண்டுமே
தண்ணீர் மோட்டார் போட்டால் மின்சாரம் போய்விடுமோ என்ற பயம்
மின்சாரம்...மின்சாரம்...மின்சாரம் ரொம்ப அசிங்கம்...
அபிராமி தான் அழகு நான் போறேன் கொடைகானல் குகைக்கு


விக்ரம்:
வசனம் எதுவும் இல்லை ஒரு ரியாக்சன் கொடுத்து விட்டு சூரிய ஒளி பின்னணியில் மறைகிறார்

 பரத்:
ஞா ஞா ஞா ஞா ஞா....என்று தலையில் அடித்து கொண்டு ரோட்டில் திரிகிறார்
அஜித்:
அய்யா இது மொத்தமும் தமிழ்நாடு
ஏதோ சில கிறுக்கு பயபுள்ளைக ஏதோ அது பேரென்ன (பக்கத்தில் ஹாஜா செரிப் சொல்கிறார் "கரண்ட்") ஆ கரண்ட் அந்த கருமாந்திரம் எங்க ஊருக்கு வரும்னு சொல்லி பல கோடி ஒதுக்கி இந்த கம்பியெல்லாம் மேல கட்டுனாங்க..ஆனா வரலியே...வவுறு எரியுதுலே...


எம்  ஆர் ராதா :
 அமெரிக்காவுல ஐ பேட் கண்டுபிடிக்குறான்
ஜப்பானில் அசிமோ கண்டுபிடிக்குறான்
ரசியாகாரன் ராக்கெட் உடுறான்
சைனாகாரன் நீர்மூழ்கி கப்பல் உடுறான்
ஆனால் poor fellows தமிழ்நாட்டுக்காரன்
தீப்பந்ததுக்கு எண்ணை விடுறான்..
நீங்க திருந்த மாட்டீங்க
அடியே காந்தா உனக்கு ஒரு குட்பை தமிழ்நாட்டுக்கு ஒரு குட்பை
ஐ ஆம் கோயிங் டூ அமெரிக்கா..
டேய் யார் மேன் அங்க பெட்டி படுக்கையை எடுத்து வை


ரகுவரன்:
வீட்டிற்குள் வருகிறார்..வியர்க்க விறுவிறுக்க பேன் சுவிட்சை போடுகிறார் ....ஆனந்த்பாபு "கரண்ட் இல்லை " என்று சொல்கிறார் ...
டென்சன் ஆகி " ஐ நோ ஐநோ ஐநோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ" என மின்சார மீட்டரை பிடுங்கி எறிகிறார்..ஐ நோ ஐ நோ...(தொடர்கிறது)

தலைவர் கவுண்டர்:
அனைத்து மின்சாதனங்களையும் தெருவில் எறிகிறார் "இது ஒரு எழவு இந்த எழவாலதான் எல்லா எழவும்" நாராயணா என்னால முடியலடா...தன்ராஜ் கிட்ட சொல்லி சந்திர மண்டலத்துக்கு டிக்கட் போட சொல்லு...ஆள உடுங்கடா சாமீ