Wednesday, 31 August 2011

பெரியாரின் கருப்பு சட்டை சீடர்களின் "மீசையில் மண் ஓட்டல" நாடகம்!!

கருப்பு சட்டைகள் சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்க கூட மனமில்லாது இதெல்லாம் மூழ்கி விடும் மண்குதிரை என உளறிகொண்டிருப்பது அவர்களின் பேதமையை காட்டுகிறதே ஒழிய யாரும் அதை கண்டுகொள்வதில்லை என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் அதை ஒத்துகொள்வதில்லை!!கீழ உழுந்தாலும் மீசையில் மண் ஓட்டல!!

Tuesday, 30 August 2011

தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்

பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனை தள்ளிவைப்பு.தூக்கை ஆயுளாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்(இந்த சுப.வீ கோஷ்டிய  காணோம்!!) சிதம்பரம் முகத்தில் கரி!!!சு.சாமி சோ வுக்கு இனிமேதான் இருக்கு(மர கழண்ட கேசுன்களை கொஞ்சம் நல்ல டாக்டராண்ட காட்டுன்கப்பா!!.ரெண்டு லூசும் அடிக்கும் லூட்டி தாங்கல!!)!!சிதம்பரம் மூலம் இந்த பிரச்னையை கொளுத்தி போட்டு ஆட்சியை கவிழ்க்க நினைத்த தமிலின தலிவருக்கு இப்படி ஓரு சறுக்கலா!!!!இது முடிவல்ல!!இனிமேல்தான் போராட்டத்தை மேற்கொண்டு முன்நகர்த்த வேண்டும்.
   சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்!!எப்படியோ நல்லது நடந்தால் சரி!

Monday, 29 August 2011

செங்கொடியின் தற்கொலை முட்டாள்தனமானது

யோவ மூணு பேரு உசுர காப்பது என்பதுதானே போராட்டத்துக்கான அச்சாணி?இப்படி மூணு பேரு உசுருக்கு பதில் ஓரு உசுரை குடுப்பது(செங்கொடியின் தற்கொலை) முட்டாள்தனமானது!!நேர்த்திகடன் என்று நாக்கை அறுத்து கொள்பவரை கண்டிக்கும் அதே "பகுத்தறிவு பேசும்"கட்சிகள்தான் இதை போஸ்டர் போட்டு ஆதரிக்கின்றனர்!!ஆராதிக்கின்றன!!எல்லா மனிதரும் சமம என்கிற தத்துவத்தையே உடைத்துபார்க்கிற விஷயம் இது!ஓரு உயிரை இன்னொரு உயிருக்கு மேலாக வைப்பதே அதீத உணர்ச்சியின்பால் வருவதுதான்!!இதை கண்டிக்கிறேன்!!எல்லாரும் கண்டிக்க வேண்டும்!!இல்லையெனில் இதை பின்பற்றி இன்னும் பலர் இதே வழியை பின்பற்றுவர்!