Friday, 23 December 2011

கடவுள் ஆஸ்கர் எல்லாம் கொடுக்குறாரா என்ன?"உண்மை" தமிழன் பாரீர்!!!!!

ஏ.ஆர் ரகுமான் பிரபலமானது ரோஜா என்னும் தமிழ் படத்தின் மூலம்!மேலும் அவர் ஆஸ்கர் வாங்கியபோது தமிழில் பேசுனதுக்கு எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சிலாகித்தனர்!இவரல்லவோ உண்மை தமிழன் என்று சொன்னார்கள்!தமிழனுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு பெருமை அப்படின்னு மக்கள் எங்கும் திரண்டு கொண்டாடினர்!
ஆனால்  இத்தகைய ஒரு மனிதர் எத்தகைய பேச்சை இப்போது பேசியுள்ளார்ன்னு   பாருங்க!தமிழனுக்கு துரோகம் இழைப்பதர்காகவே கேரளத்தவன்  காசு கொடுத்து எடுக்க சொன்ன படம் Dam999.

          கூடங்குளம் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரமது!பல லட்சம்மக்கள் பசி தூக்கம் எல்லாவற்றையும் மறந்து போராடி கொண்டிருந்தனர்!மத்திய அரசுக்கு இது பெரும் சிக்கலானது!இந்த நேரத்தில் எரிகிற குடிசையில் பீடி பற்றவைப்பது போல வந்தது Dam999 படம்!இது முல்லை பெரியாறு அணை உடைந்து அதனால் பலகிராமங்கள் மூழ்குவது பற்றிய ஒரு படம்!அதனால் இது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது!
           ஆனால் இது தொடக்கமே!இதன் தொடர்ச்சியாக அணை பற்றிய  பல போலியான தகவல்களை பரப்பி விட்டது கேரளம்!இதனால் அங்குள்ள தமிழர்கள் மற்றும் சபரிமலைக்கு செல்வோர் அடித்து நொறுக்கப்பட்டது என இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்!
          இத்தகைய தமிழக மக்களுக்கு துரோகம்இழைக்கும் ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்வதன் மூலம் ரகுமான் தனது "தமிழ் விசுவாசத்தை" காட்டியுள்ளார்!
      இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.(ஆமா கடவுள் ஆஸ்கர் பரிந்துரை குழுவில் இருப்பதை சொல்லவே இல்ல!)
     "உண்மை" தமிழனின் பேச்சு!

ஆக  எவனையாவது நம்பி ஏமாறுவது தமிழனின் பிறவி குணம்!முன்பு ரஜினிகாந்தை நம்பி ஏமாந்தனர்!இப்போ ஏமாறுவதுக்கு ஆள் தேடி கொண்டிருந்தனர்!நல்லா கிடைச்சாரு  மாயமான்!சாரி ரகுமான்!
சோறு போட்ட கையை வெட்டுவது போல இவர் சொல்லியுள்ள கருத்து எவ்வளவு அசிங்கத்தை இவர் மனதில் வைத்துள்ளார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் மீது இவர் வைத்த்துள்ள "பாசத்தையும்" இது தெளிவாக காட்டுது!இரைச்சல் நாயகனின் மேலும் ஒரு இரைச்சல் இது!
 


Thursday, 15 December 2011

ராமராஜனும்,பால் கறப்பவர்களும் மற்றும் தமிழனின் பொது புத்தியும்!

மொதல்லையே சொல்லிபுடுரேன்!நான் ராமராஜன் ரசிகன் இல்லை!அவர் கலர் கலராக டிரெஸ் போட்டு கொண்டு ஆடுவது, ஓவர் மேக்கப், பாடியே காளை மாட்டை(வாடி வாடி என்னுடைய பேச்சி) அடக்குவது போன்ற காமெடிகளை நானும் செமையா கிண்டல் செய்தவன்தான்!ஆனால் பேச்சு அதை பற்றியல்ல!
    தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களின் பொதுபுத்தி பற்றியது!
பெரும்பாலான டிவிகளில் மிமிக்ரி அல்லது மாகரி ஷோ நடத்துவர்!அதாவது ஒரு நடிகர் அல்லது நடிகை அல்லது ஒரு சினிமா பிரபலம் போல ஒருவர் தோன்றி அவர் பேசிய வசனங்களை இவர் காமெடியாக பேசுவது அல்லது அவரது மேனரிசங்களை இவர் நக்கல் பண்ணுவது ...இப்படி போகும் நிகழ்ச்சி!பொதுவாக பார்த்தால் அது நன்றாகத்தான் இருக்கும்!
           ஆனால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு!அதான் ராமராஜனை கிண்டல் செய்வது!சரி கலர் கலர் சட்டைகளை போட்டுகொண்டு கிண்டல் செய்தால் சரி நாமும் ரசிக்கலாம்!அல்லது காளை மாட்டை வாடி வாடின்னு பாடுனா ரசிக்கலாம்!ஆனால் என்ன செய்கின்றனர்?
          ஒருவர் அரை ட்ரவுசர் போட்டுகொண்டு தோளில் ஒரு கயிற்றை மாட்டிக்கொண்டு கையில் ஒரு பால் கேனை எடுத்துகொண்டு உள்ளே நுழைவார்!உடனே அந்த டிவி நடுவர்கள் ஏதோ இவர் நிர்வாணமாக வந்துவிட்டதுபோல விழுந்து விழுந்து சிரிப்பர்!பின்னர் அவர் மாடு கரப்பதுபோல பாவ்லா செய்வார் !அதற்கு இவர்கள் அதற்கு மேல் சிரிப்பர்!(ராமராஜன் மாட்டுகாரனாக பால்கறப்பவராக நடித்த ஒரே படம் எங்க ஊரு பாட்டுக்காரன் .)

        இப்போ சிரிப்பது ராமராஜன் என்னும் நடிகரின் பிம்பத்தை பார்த்தில்ல!இவர்கள் சிரிப்பது டவுசர் போட்டுகொண்டு பால் கறக்கும் பால்காரர்களை பார்த்தே!ஏன்னா இவர்கள் ஹை கிளாஸ் மகானுபாவுகள்!பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர மேல் நடுத்தர அல்லது ஹை கிளாஸ் மக்களே!இவர்கள் டை கட்டிக்கொண்டு ஒபீஸ் போவது கவுரவமாம்!ஆனால் ட்ரவுசர் போட்டு கொண்டு பால் கறப்பது நகைப்புக்குரியதாம்! இது நகரத்தில் இருப்பவன் கிராமத்தில் இருப்பவனை ஏளனம செய்வதாகவும் ஆகிறது!
       அது சரி கேன்வாஸ் ஷூ போட்டுகொண்டு மாட்டுகாரனாக வந்தால்தான் உங்களுக்கு பிடிக்கும்போல!
         இந்த மனப்போக்கை ஊக்குவிக்கும் ஊடகங்கள் தங்களின் டீ.ஆர்.பி ரேட்டிங் பற்றிதான் கவலைப்படும்!அவர்களுக்கு மக்களின் மனநிலையை பற்றி  கவலை இல்லை!இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை!

Saturday, 3 December 2011

துடி துடித்த நடிகர் பிங்கி ராஜா!மனித நேயத்தின் மொத்த சொரூபம்!

நடிகர் பிங்கி ராஜாவிடம் தயங்கி நின்றிருக்கிறார் ஒருவர்!அவுரு புள்ளைக்கு சரக்கடிச்சி கீழ உழுந்து காலு ஓடைஞ்சி போச்சாம்!"யோவ கதை சொல்ல வந்தேன்னு நெனச்சேன் இதை மொதல்லையே சொல்ல கூடாதா"ன்னு சொல்லி 65 ஓவா கொடுத்து "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன்னு நீ இதை வெளியில்(பேஸ்புக் உட்பட) லீக் பண்ணி விடு!அப்புறம் பாரு!மனித நேய மாணிக்கம் பட்டம் எனக்குதான்"!அப்படின்னு சொன்னாராம் பிங்கி ராஜா!
சாரி  பிங்கி ராஜா!நீங்க நடிப்பதுக்கு சம்பளம் வாங்குறீங்க இல்ல?அதுல எம்புட்டு கருப்பு எம்புட்டு வெள்ளையில் வாங்குறீங்க?எம்புட்டு வரி காட்டுறீங்க?நீங்க க்யூவில் நின்னு ஒட்டு போட்டதாக ஒரு பழைய ஸ்டில்லை வைத்துக்கொண்டு "ஆஹா!இவர்தான் உண்மையான குடிமகன்"னு இந்த இளிச்சவாய மக்கள் நெகிழ்ந்து போறாங்க!அவங்களுக்கு தெரியுமா நீங்க உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடவே இல்லைன்னு!
பிரியாணி போட்டா மனித நேய பண்பாளர் ஒட்டு போட க்யூவில் நின்னு அதை தனது போட்டோக்ராபர் மூலம் போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் விட்டு "ஆஹா!இவரல்லவோ உண்மை மனிதன்" அப்படின்னு உங்கள் அல்லகைகளை விட்டே செய்தி பரப்புரீங்க!ஹ்ம்ம்...ஏமார்றவன் இருக்குற வரை ஏமாற்றுகிரவன் இருப்பான்! தமிழன்னா  கேட்கவும் வேணுமா?எங்கிருந்தோ பிற மாநிலத்துல இருந்து வந்த பிங்கி ராஜாவுக்கு தமிழே ஒழுங்கா பேச வராது!அதுவும் பேட்டிகளில் 90% English 10% தமிழ் இப்படிதான் பேசுவாரு அந்த மனித குல மாணிக்கம்!ஆனாலும் முட்டாள் தமிழன் அவர் பின்னாடி ஓடுறான்!ஒடுங்க ராசா!ஒடுங்க!

Thursday, 1 December 2011

திரிசா கெடைக்கலன்னா திவ்யா!!

திரிசா கெடைக்கலன்னா திவ்யா!!
http://charuonline.com/blog/?p=2669
 மேலும் சாரு மாமாவுக்கு குரு பூஜை நாள்:திசம்பர் 18
http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_27.html 
 
 
சிறப்பு விருந்தினர்கள் சுராத்து மற்றும் செந்தேள் சென்காயிரம் மற்றும் சகிலா  ..சரி சரி வந்துடுங்க!