Thursday 15 December 2011

ராமராஜனும்,பால் கறப்பவர்களும் மற்றும் தமிழனின் பொது புத்தியும்!

மொதல்லையே சொல்லிபுடுரேன்!நான் ராமராஜன் ரசிகன் இல்லை!அவர் கலர் கலராக டிரெஸ் போட்டு கொண்டு ஆடுவது, ஓவர் மேக்கப், பாடியே காளை மாட்டை(வாடி வாடி என்னுடைய பேச்சி) அடக்குவது போன்ற காமெடிகளை நானும் செமையா கிண்டல் செய்தவன்தான்!ஆனால் பேச்சு அதை பற்றியல்ல!
    தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களின் பொதுபுத்தி பற்றியது!
பெரும்பாலான டிவிகளில் மிமிக்ரி அல்லது மாகரி ஷோ நடத்துவர்!அதாவது ஒரு நடிகர் அல்லது நடிகை அல்லது ஒரு சினிமா பிரபலம் போல ஒருவர் தோன்றி அவர் பேசிய வசனங்களை இவர் காமெடியாக பேசுவது அல்லது அவரது மேனரிசங்களை இவர் நக்கல் பண்ணுவது ...இப்படி போகும் நிகழ்ச்சி!பொதுவாக பார்த்தால் அது நன்றாகத்தான் இருக்கும்!
           ஆனால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு!அதான் ராமராஜனை கிண்டல் செய்வது!சரி கலர் கலர் சட்டைகளை போட்டுகொண்டு கிண்டல் செய்தால் சரி நாமும் ரசிக்கலாம்!அல்லது காளை மாட்டை வாடி வாடின்னு பாடுனா ரசிக்கலாம்!ஆனால் என்ன செய்கின்றனர்?
          ஒருவர் அரை ட்ரவுசர் போட்டுகொண்டு தோளில் ஒரு கயிற்றை மாட்டிக்கொண்டு கையில் ஒரு பால் கேனை எடுத்துகொண்டு உள்ளே நுழைவார்!உடனே அந்த டிவி நடுவர்கள் ஏதோ இவர் நிர்வாணமாக வந்துவிட்டதுபோல விழுந்து விழுந்து சிரிப்பர்!பின்னர் அவர் மாடு கரப்பதுபோல பாவ்லா செய்வார் !அதற்கு இவர்கள் அதற்கு மேல் சிரிப்பர்!(ராமராஜன் மாட்டுகாரனாக பால்கறப்பவராக நடித்த ஒரே படம் எங்க ஊரு பாட்டுக்காரன் .)

        இப்போ சிரிப்பது ராமராஜன் என்னும் நடிகரின் பிம்பத்தை பார்த்தில்ல!இவர்கள் சிரிப்பது டவுசர் போட்டுகொண்டு பால் கறக்கும் பால்காரர்களை பார்த்தே!ஏன்னா இவர்கள் ஹை கிளாஸ் மகானுபாவுகள்!பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர மேல் நடுத்தர அல்லது ஹை கிளாஸ் மக்களே!இவர்கள் டை கட்டிக்கொண்டு ஒபீஸ் போவது கவுரவமாம்!ஆனால் ட்ரவுசர் போட்டு கொண்டு பால் கறப்பது நகைப்புக்குரியதாம்! இது நகரத்தில் இருப்பவன் கிராமத்தில் இருப்பவனை ஏளனம செய்வதாகவும் ஆகிறது!
       அது சரி கேன்வாஸ் ஷூ போட்டுகொண்டு மாட்டுகாரனாக வந்தால்தான் உங்களுக்கு பிடிக்கும்போல!
         இந்த மனப்போக்கை ஊக்குவிக்கும் ஊடகங்கள் தங்களின் டீ.ஆர்.பி ரேட்டிங் பற்றிதான் கவலைப்படும்!அவர்களுக்கு மக்களின் மனநிலையை பற்றி  கவலை இல்லை!இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை!

1 comment:

பல்பு பலவேசம் said...

சரியான நெத்தியடி!

Post a Comment