Sunday 20 May 2012

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் -1A

சில எடக்குமடக்கான கேள்விகள்....(இவை ஒன்லி பிகின்னிங்...நிறைய வரும்)
-ஆரிய திராவிட யுத்தம் என்பது ஆர்யாவுக்கும் திராவிடுக்கும் நடக்கும் யுத்தமா?
-பிராமண பணியா யுத்தத்துக்கு போட்டு செல்லப்பட வேண்டியது முண்டா பணியனா கை வச்ச பணியனா?
-நான் தீக்குளிப்பேன் என சொல்வது எந்த வகையான பகுத்தறிவு?

 ஆறிய சாரி ஆர்யா டிராவிட் யுத்தம்...

  Slum dog Scandal என்ற பெயரில் ஒரு வீடியோ செகண்ட் ரிலீஸில் பிக்கப் ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணைப்பை இசை விமர்சகர்(என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட)ஷாஜிக்கு மெயில் செய்ததில் Door locked என்று மெயில் திரும்பி வந்துவிட்டது..[ஏற்கெனவே சீப் பப்ளிசிட்டிக்காக இவர் ஒரு இசை அமைப்பாளரின் அந்தரங்கங்களை விமர்சித்தபோது நான் எழுதிய ஒரு பக்க கடிதத்துக்குகிடைத்த பதில் சிவாஜி ஸ்டைலில் சொல்லவேண்டுமெனில் "நான் என்ன்னத்த சொல்றதுன்னே தெரியளியேபா" I don't know what to say என்று பதில் அனுப்பினார் அண்ணாத்த]..இந்த முறை ஏன் டோர் லாக்ட் என விசாரித்தபோது அண்ணாத்த ஒரு பிரபல இசை அமைப்பாளருடன் போட்டோ எடுத்துக்கொள்ள சென்றுள்ளாராம்...அவர் ஆப்பிள் ஜூஸ் ஆட்டுக்கால் சூப் கொடுத்தார் என்று தயிர்மையில் அடுத்த மாதம் கட்டுரை வர வாய்ப்பதிகம்...


           உருவம் என்ற மோகன் படம் எந்த டிவியிலும் போடுவதாக தெரியாமல் போகவே அதை டிவிடியில் வாங்கி பார்த்தேன்...யார் (மைக்) மோகன் என்றே முதல் அரை மணி நேரத்திற்கு தெரியவே இல்லை..கடைசியில் மீசை இல்லாமல் விக் வைத்துக்கொண்டு(இந்த படம் அவரது கடைசி கேரியர் நாட்களில் வந்தது) பார்ப்பதற்கு Tom boy பெண் போல இருந்தார்...

படத்தில்  The Exorcist படத்தின் காட்சிகளை சுட்டு பல இடங்களில் போட்டுவிட்டார்கள்...கடைசியில் அந்த சிறுமிக்கு பதில் மோகன் கட்டிலில் படுத்திருக்க பாதிரியாருக்கு பதில் நம்பூதிரி...கட்டில் மேலே எழும் காட்சியை அவர்கள் படம்பிடிக்க தொழில் நுட்பம் கைகொடுக்கவில்லை போல...லைட்டாக யாரோ கட்டிலை தூக்கி தூக்கிய கட்டில் காலை மட்டும் க்ளோசப்பில் காட்டி முடித்துவிட்டனர்...

No comments:

Post a Comment