Saturday, 16 November 2013

சூர்யபார்வை (1999) மற்றும் Leon the professional(1994)

Leon The professional(1994) பார்க்க நேர்ந்தது.இதில் முரண் என்னவெனில் இந்த படத்தின் தமிழ் உல்டாவான அர்ஜுன் நடித்த சூரியபார்வை (1999) படத்தை ஒரு பிரதி என்று தெரியாமலேயே(அப்பெல்லாம் விக்கிபீடியா கிடையாதே) ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.நன்றாகவே இருந்தது.குறிப்பாக கவுண்டரின் காமெடி.வெளிநாட்டில் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக வந்து செந்திலின் சூழ்ச்சியால் வீரப்பன் போல காட்டுக்குள் ஒளிந்து வாழும் கேரக்டர்.விஷயம் அதுவல்ல...இந்த லியோனுக்கும் சூரிய பார்வைக்குமான வேறுபாடு/ஒற்றுமைகள் பற்றி...


               லயோன் படத்தை பொறுத்தளவில் உணர்ச்சிகள் அற்ற/உணர்சிகள் இல்லாதது போல வாழும் ஒரு ஹிட்மேன் மற்றும் தனது அன்பு தம்பியை இழந்த ஒரு சிறுமி.இவர்களுக்கு இடையேயான உறவு.தமிழ் படத்தை பொறுத்தளவில் நடலி போர்ட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் போலவே தோன்றும்.அவரை ஒரு ஆடிப்பாடும் வழக்கமான ஹீரோயின் போலவே காட்டி இருப்பார்கள்(டூயட் மட்டும்தான் பாக்கி).மேலும் நம் தமிழ் சினிமாவில் பதிமூன்று வயது சிறுமிகள் எல்லாம் நாயகியாக பார்த்து(லிப் கிஸ் காட்சிகளில் எல்லாம் நடிக்க வைத்த ஓலக இயக்குனர்கள் உள்ள நிலையில்) பழகிவிட்டதால் இந்த படத்தில் இந்த சிறுமியின் கதாபாத்திரம் வித்தியாசமாக தெரியவில்லை ..

                ஆனால் லயோன் படத்தில் அந்த சிறுமியின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கும் லியோனுக்குமான உறவு/நட்பு என்பது கத்தி மேல் நடப்பது போல சொல்லப்பட்டுள்ளது.பதின்ம வயதினருக்கே உரிய  இனக்கவர்ச்சி (infatuation), அதை காதல் என்று நம்புதல், அதை லயோன் மறுத்தல் எல்லாம்(இது  லயோன்  படம் வந்த  சமயத்தில்  கடுமையான விமர்சனத்திற்கு  உள்ளானது) தமிழில் இல்லை என்றாலும்  படத்தின்  முடிவில்  அர்ஜுனும்  அந்த  சிறுமியும் சேர்ந்து  தப்பிப்பதாக  கேள்வியோடு  முடித்திருப்பார்கள்.காதலா?நட்பா?ஒருமாதிரி  தந்தை  உறவா? அதைப்பற்றி  தெளிவான  காட்சிகள்  தமிழில்  இல்லை.ஆங்கிலத்தில்  லயோனுக்கு  பிளேஸ்பேக்  என்று  எதுவும்  இல்லை.ஆனால்  தமிழ்  பார்வையாளர்களுக்காக  இங்கே   அர்ஜுன்   உயிராக கருதும் செடிக்கு  ஒரு பிளேஸ்பேக்.அனாதையான அர்ஜுனை விஜயகுமார்-மஞ்சுளா தத்தெடுத்து வளர்க்க அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்க "இனி இவன் எதுக்கு?" என்று பேசிகொண்டிருக்கும் காட்சியை பார்க்கும் சிறுவயது அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.பின் பல ஆண்டுகள் கழித்து சிறையில் அவரும் விஜயகுமாரும் ஒரே செல்லில் இருக்க அப்போது அவர் "நான்தான் உங்கள் மகன்" என்று சொல்லாமல் புழுங்குகிறார்.பின் வி.குமார் மரணமடைய அவரது அஸ்தியை ஒரு பூந்தொட்டியில் நிரப்பி அதில் செடி வளர்ப்பதாக காட்சியமைப்பு இருக்கும்.
          அந்த சிறுமிக்கு சுட கற்றுகொடுக்கும் காட்சிகள்,லியோனும் சிறுமியும் சேர்ந்து வீடு வீடாக சென்று கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் தமிழில் இல்லை.அந்த காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும் 

               முக்கியமாக  கவனிக்கவேண்டியது  லயோன் படத்தில்  ழான்  ரெனோவின்(Jean Reno)  உடல்மொழி  பேசும்  விதம்  ஆகியவற்றை  அப்படியே  அர்ஜுன்  தமிழில்  பிரதி  எடுத்திருப்பார்.ஆனால் வில்லனாக  வரும்  Gary Oldman ன்  சாயல்  துளியும்  இல்லாமல்  ரகுவரன்  தனது  தனித்துவமான  ஸ்டைலில்  அந்த  வில்லன்  கேரக்டரை  செய்திருப்பார்!அதான்  ரகுவரன்!


ராதாரவியும்  தனது  கேரக்டரில்அட்டகாசமாக  பொருந்தியிருப்பார்(வழக்கம்போல?)!
உறுத்தல் அந்த நாயகியாக நடித்த சிறுமியின் தேர்வு சரியில்லையோ என்று எண்ண வைக்கும்.லயோன் கடைசியில் மரணமடைவார்.ஆனால் தமிழில் அவர் அந்த சிறுமியோடு தப்பிப்பதாக காட்டி இருப்பார்கள்.இரண்டு படத்துக்கும் பொதுவாக என்ன  வேறுபாடு என்றால் ஆங்கிலப்படம் ஆழமாக/கத்திமேல் நடக்கும் விதத்தில் காட்சியமைப்பு இருக்கும்.அந்த படத்தை பார்த்தபின் சூரியபார்வை பார்த்தால் தட்டையான புரிதலோடு எடுக்கப்பட்டதாக தோன்றும்.

13 comments:

Anonymous said...

இந்தப் படமும் ஆலிவுட் காப்பிதானா? கொடுமை!!! ஜிங்கிச்சா தான் போங்கோ !

வடக்குபட்டி ராம்சாமி said...

பொதுவாக நம்மாளுங்க கமல் படங்களை மட்டும்தான் கண்காணிப்பார்கள்...மற்ற இயக்குனர்களும் இந்த உல்டா வேலைகள் பல செய்துள்ளார்கள்

முட்டா நைனா said...

நல்ல வேளைபா... அந்தப் பட்த்த இன்னும் நா கண்டுக்லபா... உசார் பட்துனதுக்கு ரெம்ப டேங்க்ஸ் வட்க்குபட்டி... டைம் கெட்ச்சா நம்ப கடையாண்ட ஒரு தபா வந்து போபா...

பால கணேஷ் said...

நான் ரெண்டு படத்தையுமே பார்த்ததில்லை. ஆனா நீங்க சொல்லியிருக்கறதை மிக ரசித்தேன்!

வடக்குபட்டி ராம்சாமி said...

@பால கணேஷ்
நன்றி :)
*
*
@நைனா கண்டிப்பா ஒரு தபா விசிட்டு பண்ணுறேன்

Sarhoon Mohamed said...

இதே போல அர்ஜூன் நடித்த இன்னொரு படம் இருக்கின்றது. அதுவும் ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ்தான்.
கதை - ஒரு குழந்தைக்கு பாடிகார்ட் ஆக இருக்கும் நாயகன் அக்குழந்தை கொல்லப்பட, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கிகின்ற கதை.
மூலப்படம் மற்றும் அர்ஜூனின் படப் பெயர்கள் மறந்துவிட்டன. யாராவது சொல்லுங்களேன்!

Vadakupatti Raamsami said...

@Sarhoon அந்தப்படம் ஆணை (2004).மூலப்படம் தெரியவில்லை

Sarhoon Mohamed said...

யோவ்!! வருஷம் மூணாச்சு! இப்ப பதில் வருது.. ரொம்ப்பா ஸ்பீடுதான்.... :P

Vadakupatti Raamsami said...

ஐயோ அண்ணா அத அப்ப நா பாக்கல்லீங்!

KY RAJ said...

Man on fire

KY RAJ said...

Man on fire

kalisudhan sakthibala said...

Leon The professional பார்த்துட்டேன். அருமையான படம். அந்த சிறுமி லயானுடன் ஒன்றாக படுக்கும் காட்சி கிட்டத்தட்ட முள்மேல் நடந்த காட்சி தான். சூரிய பார்வை பார்த்துட்டு வந்துடுறேன்.

Vadakupatti Raamsami said...

உண்மைதான்.

Post a Comment