கோலிவுட்டில் இப்போது என்னென்ன படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்டுடியோக்களை ஒரு ரவுண்டு வந்தோம்!அதில் கண்டவை கீழே...
Wednesday, 22 March 2017
Friday, 10 March 2017
கூகுள்,மோட்டோ மற்றும் Android one
கூகுள் நிறுவனம் Nexus க்கு மூடுவிழா நடத்திவிட்டு பிக்ஸல் வெளியிட்டு பிரபலமாகி கலந்துபட்ட விமர்சனங்கள்(ஆப்பிள் போல கூகுள் மாறுவது ஏன்?என்று சிலரும் மிக நல்ல முயற்சி என்று வேறு சிலருமாக!)வந்துவிட்ட நிலையில்(பிக்ஸல் 2 வே வரப்போகுது..இப்ப போய்-கும்மாங்கோ) இப்போது பேசவேண்டியது Android one பற்றி.ஆண்ட்ராய்ட் மார்ஸ்மெல்லோ நோகா தெரியும்!அதென்னாது ஆண்ட்ராய்ட் ஒன்?என்று கேட்டால் அது கூகுளின் பலவித ப்ராஜக்ட்களுள் ஒன்று.
அதாவது பல மொபைல் உற்பத்தி கம்பெனிகள் கூகுளோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மொபைல் தயாரித்தல்.அந்த மொபைலின் உட்புற ஹார்ட்வேர் சமாச்சாரங்கள் அதன் வடிவமைப்புகள் எல்லாம் கூகுள் வகுத்துக்கொடுக்கும்.மென்பொருள்(அதான் ஆண்ட்ராய்ட் ஓஎஸ்) எவ்வித skin ம் இல்லாத pure stock android.
அதாவது சேம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கினாலும் அதில் touchwiz UI காணலாம்!அதாவது அதில் உள்ள ஓஎஸ்ம் ஆண்ட்ராய்ட்தான்.ஆனால் மேற்புற ஸ்கின் டச்விஸ்.அதில் எனக்கு என்றுமே ஈடுபாடு இருந்ததில்லை.முதலில் ரொம்ப ஹெவியா ரேமை கபளீகரம் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மிக லைட்டான டச்விஸ் உருவாக்கப்பட்டது.இப்போதுள்ள சேம்சங் மாடல்களில் அந்த light டச்விஸ் ஐ காண முடியும்.
அதுமாதிரி லயீகோ(LeEco) மாடல் போன்களில் E UI,ஷவ்மீ(Xiaomi) மாடல்களில் MIUI ....etc...etc..,
ஆனால் மேற்சொன்ன அந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் கூகுளோடு ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்ட்(எவ்வித ஸ்கின்னும் ஜிகினா வேலைகளும் இல்லாத)யே வழங்கும்.தவிர மிக முக்கியமான ஒரு விஷயம் அந்த ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களுக்கு இரண்டு வருட ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் உத்தரவாதம்!அவற்றை கூகுளே அனுப்பி வைக்கும்(OTA).
நல்லாத்தான இருக்கு?ஏன் இது வெற்றி பெறவில்லை?என்று கேட்டால் அது கூகுளின் பிழை என்று மொத்தமாக சொல்லிவிட முடியாது!இப்போது கைபேசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சேம்சங், சோனி,எல்ஜி,ஷவ்மீ, ஹுவாவே(Huawei) போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் சேர விரும்பவில்லை.காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி UI skin களை உருவாக்குவதற்கும் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் பல கோடி முதலீடு செய்திருப்பதால்!
அவர்கள் அனைவரும் இந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டை பயன்படுத்தினால் அவர்களுக்குள் வேறுபாடு என்பது இருக்காது!விளம்பரங்களில் தனித்துசொல்ல ஜிகினா features(shake to activate camera,gesture support போன்றவைகளை சொல்லலாம்) இருக்காது.
ஆகவே முன்னணி கைபேசி நிறுவனங்கள் இந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் சேர விரும்பவில்லை!வந்தவைகள் எல்லாம் டம்மி பீசுங்கதான்!
மைக்ரோமேக்ஸ்,கார்பன்,ஸ்பைஸ் இம்மூன்றும் திட்டத்தில் சேர்ந்தது.Dream Uno,Canvas A1,Sparkle V போன்ற பெயர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?இந்த மூன்று மாடல்களும் கூகுள் வரையறுத்த ஹார்ட்வேர் டிசைன் படி தயாரிக்கப்பட்ட மாடல்கள்.மூன்றுக்கும் இரண்டு வருட ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் உண்டு.இன்னும் சொல்லப்போனால் சில நேரத்தில் நெக்ஸஸ் மாடல்களுக்கு முன்பே இந்த ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களுக்கு அப்டேட் வந்த கதையெல்லாம் உண்டு.ஆனாலும் இவை வரவேற்பை பெறவில்லை!குறைந்த விலை என்ற ஒற்றைக்குறிக்கோளை அடிப்படையாக வைத்தே அந்த ஹார்ட்வேர் ஸ்பெக்ஸ் வரையறுக்கப்பட்டிருந்ததால் மிக மோசமான specs ஐ அவை கொண்டிருந்தது.அதனால் எடுபடவில்லை(ஒட்டுமொத்த மென்பொருள் அனுபவம் என்பது நல்லா இருந்தும்கூட).
இதற்குமுன் 2012ல் கூகுள் மோட்டோரோலாவை வாங்கியது.டம்மியா கிடந்த மோட்டோரோலா நிறுவனம் புத்துணர்ச்சி பெற்றது.மேற்சொன்ன ஆண்ட்ராய்ட் ஒன் பார்முலா அதற்குமுன் மோட்டோரோலா மாடல்களில் தான் அமல்படுத்தப்பட்டிருந்தது.stock android,இரண்டு வருட உத்திரவாத அப்டேட்டுகள்,மற்றும் டிசைன்&ஹார்ட்வேர் எல்லாம் கூகுளின் விருப்பம்.உண்மையில் அட்டகாசமாக இருந்தது.மூன்றே மூன்றுமாடல்கள்.
Moto E,G,X(விலை வரிசைப்படி).
ஆண்ட்ராய்டின் முழுஅனுபவத்தை பெற விலையுயர்ந்த Nexus போன்கள் மட்டுமே வழி என்பதை இது மாற்றியது.poor man's nexus என்றுகூட இது சொல்லப்பட்டது.நெக்ஸஸ் அனுபவம் நெக்ஸஸ் போன்களின் பாதி,கால் பங்கு விலையில் கிடைத்தது!அப்புறம் பல்வேறு சர்ச்சைகள் .லாபத்தை கணக்கில் கொள்ளாமல் குறைந்த விலையில் விற்றதால் இழப்பு அது இதுவென்று 12 பில்லியன் டாலருக்கு வாங்கிய நிறுவனத்தை லேனோவோவுக்கு வெறும் மூன்று பில்லியன் டாலருக்கு விற்றார்கள்!
லெனோவோ மோட்டோரோலாவை வாங்கியதற்கு நாய் பெற்ற தெங்கம்பழம் உதாரணம் ஏகப்பொருத்தம்!மோட்டோரோலாவும் பெரிதாக வளரக்கூடாது(வளர்ந்தால் தாய் கம்பெனி லெனோவோ பாதிக்கப்படுமாம்),அதேநேரம் மோட்டோரோலா காலம் காலமாய் ( 90 களிலேயே மோட்டோரோலா மொபைல்கள் பிரபலம்) மோட்டோரோலா வைத்திருக்கும் பல்வேறு patent களும் வேறு யார் கைக்கும் போய்விடக்கூடாது என்று குட்டையை குழப்பிய கதையாய் மோட்டோவை வைத்திருந்தது லெனோவோ!
பெயரளவுக்கு மோட்டோ மொபைல்களை வெளியிட்டது.2014 ல் வந்த மோட்டோவுக்கும் இப்போது கிடைக்கும் மோட்டோ மாடல்களுக்குமான வித்தியாசம் அப்பட்டமாக தெரியும்!மேலும் மோட்டோவின் மிக முக்கிய பலமான இரண்டு வருட ஆண்ட்ராய்ட்அப்டேட்டுகள் மீதும் கைவைத்தது லெனோவோ.
இப்போது ஆண்ட்ராய்ட்நோகா(Nougat) அப்டேட் சென்ற வருடம் வந்த Moto G4,G4 plus,Play மற்றும் எக்ஸ் மாடல்களுக்குத்தான் .ஆனால் அதற்கு முன்னர் 2015 ல் வந்த Moto G Turbo வுக்கு அப்டேட் கிடையாது!இதில் என்ன காமெடின்னா மோட்டோ ஜி டர்போவோடு ஒப்பிட்டால் மோட்டோ ஜி ப்ளே குப்பையான SoC!ஆனால் அதற்கு அப்டேட் உண்டு!அதைவிட வலுவான SoC கொண்ட டர்போவுக்கு நோகா கெடியாது!தவிர Moto E,G,X என்று மூன்றே மூன்று மாடல்கள் என்பதையும் மீறி தாறுமாறாக ப்ளஸ், ப்ளே,டர்போ என்று எண்ணிலடங்கா மோட்டோ மாடல்களை விடுகிறது .இப்படி விடுவதால் எல்லா மாடல்களுக்குமான சப்போர்ட் என்பது கழுதை பட்ட பாடுதான்!
மோட்டோரோலா என்று அல்லாமல் Moto by Lenovo என்றுதான் போடுவோம் என்று இடையில் காமெடி செய்தது லெனோவோ!இப்ப பேக் அடிச்சி "தப்பா சொல்லிட்டோம்!இனி அந்த மாடல்களை மோட்டோரோலா என்றே அழைப்போம்" என்று சொல்லியுள்ளது லெனோவோ!
லெனோவோ ஒரு குப்பை கம்பெனி என்பதை இப்போதாவது உணர்ந்தால் சரி!ஆனால் அது திருந்துகிற மாதிரி தெரியல.இரண்டு வருட அப்டேட் இனிமேலாவது கிடைக்கும் என்றெல்லாம் நம்ப நான் தயாரில்லை!
இப்போது திடீர் காமெடியாய் கூகுள் தனது ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தை தூசு தட்டியுள்ளது.துருக்கி கம்பெனி ஜெனெரல் மொபைல்ஸ் GM5 GM5 plus என்று இரு ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்தி வந்துள்ளது.அது என்னை ஈர்க்கவில்லை.இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என நான் நம்பவில்லை.
கூகுள் மோட்டோரோலாவை வாங்கியபின் "நாங்கள் மற்ற ஆண்ட்ராய்ட் போன் கம்பெனிகளுக்கு
போட்டியல்ல!மோட்டோ தனி" என்றெல்லாம் சப்பைகட்டுகட்டியது!ஆனா இப்போ கூகுளே பிக்ஸல் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது!இதுமட்டும் மற்ற கம்பெனிகளுக்கு போட்டி என்றாகாதா?ஆகமொத்தம் கூகுள் லெனோவோ இரண்டும் சேர்ந்து குறைந்த விலையில் nexus அனுபவம் என்ற விஷயத்திற்கு சங்கூதியதுதான் மிச்சம்!

Old Vs New Touchwiz UI |

ராஜாதி ராஜா!Moto X 2014 |

GM5 |