முதலில் நாம் சென்றது நெற்றிமாறன் இயக்கி கூர்யா நடிக்கும் வாடியவாசல்
பட ஸ்பாட்டுக்கு.
.
நெற்றி: சேறும் சகதியுமாய் ஒரு குட்டையில் இருந்து
எழுந்து வரீங்க!அப்படியே டைட் க்ளோசப்பில் கேமராவை பார்த்து “படிய்யா!படிடா
டேய்!படிச்சு தொலைடா எருமை!” ன்னு ஆவசேமா அனல் தெறிக்க பேசுறீங்க!
.
கூர்யா: க்கும்!படம் பாக்க தியேட்டருக்கு வரவனே ஸ்கூல் காலேஜ்
பசங்கதான்!நாம படிடா!கடிடா!ன்னு கடிச்சிட்டு இருந்தா எந்திரிச்சு ஓடிடுவான்!
நெற்றி: ஓடட்டும்லா!படம் ஓடாட்டி எனக்கென்ன?எசகுபிசகா எதையாவது ஒரு
படம் எடுத்துட்டு கடைசில இப்படி ஒரு அட்வைஸ் பண்ணாத்தான் ஒலக விமர்சகன் படத்தை
ஒலகசினிமாம்பான்!எனக்கும் மாசிய விருது கிடைக்கும்!
கூர்யா: அப்போ எனக்கு?
.
நெற்றி: இந்தாங்க சங்கு!டைட் க்ளோசப்பில் அட்வைஸ் பண்ணிட்டு அப்படியே
இந்த சங்கை ஊதிய மேனிக்கு அப்படியே மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் ஒரு புள்ளியா
மறைஞ்சு போகுற வரைக்கும் காட்டி எண்டு கார்ட் போடுறோம்!
.
கூர்யா (மைன்ட் வாய்ஸ்): க்கும்!ஏற்கெனவே என்னோட மார்க்கெட் அந்த
நிலைமைலதான் இருக்கு!இதை இவன் நேரடியாவே சீனா எடுக்க போறானாம்!யப்பா மிடில!
************************************************************************************************************************.
அடுத்து கங்கட் கிரபு இயக்கி மம்பு நடிக்கும் மான்ஆடு பட ஸ்பாட்!
மாலை 6 மணி.
கங்கட் கிரபு: யப்பா ஒருவழியா தெளிஞ்சி கிளிஞ்சி நாமதான் கடைசியா ஸ்பாட்டுக்கு
வந்தோம்னு நினைச்சா மம்பு நமக்கு மேல இருக்கான்!சரி அட்ஜஸ்ட் பண்ணுவோம்! டேய்
மேக்கப்பு! அந்த தொப்பையும் தொந்தியுமா இருக்குற எக்ஸ்ட்ராவை புடிச்சு பெருசா தாடி
ஒட்டி குல்லா மாட்டி கூட்டியா!லாங் ஷாட்ல எடுத்து மம்புன்னு ஒப்பேத்துவோம்!
.
எக்ஸ்ட்ரா வந்ததும்
கங்கட் கிரபு: ம்ம்...ஓகே!அப்படியே மேரா நாம் அப்துல் ரகுமான்!மேரா
நாம் அப்துல் ரகுமான்னு பாடிகிட்டே விரலை நல்லா வளைச்சு நெளிச்சு அபிநயம் பண்ணு!
எக்ஸ்ட்ரா: மேரா நாம் அப்துல் ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.ரகுமான்!! மேரா
நாம் ஏ.ஆர்.முருகதாஸ் !!!!!
அசிஸ்டன்ட்:சார் லிப் சிங்க் ஆகல!
.
கங்கட் கிரபு:ஆகாட்டி போகட்டும்!எடுத்தவரைக்கும் எடிட்டிங்
கொண்டுவா!அங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!என்று சொல்லிவிட்டு மம்புவுக்கு போன்
செய்கிறார்.யாரு மம்புவா?
.
மம்பு: ஏய்ய்ய் மம்பு இல்ல!எம்டிஆர் னு சொல்லு!
.
கங்கட் கிரபு:ஓ எம்டிஆரா?எரடு மசாலா
தோசா த்வரிதா தரலு!
மம்பு: என்னையே கலாய்க்கிறானுங்களா!இரு வச்சிக்கிறேன்....ஹலோ
கங்கட்ஜியா?நா இப்ப வெயிட் ரிடக்ஷன் ப்ரோக்ராமுக்கு மலேசியா வந்திருக்கேன்!இங்க
பாத்ரூம்ல க்ரீன் மேட் தொங்கவிட்டு அப்படியே நா செல்பி கேமராவுல வசனத்த
பேசிடுறேன்!நீங்க அந்த பக்கம் பேஸ்டைம்ல
அதை அப்படியே ரெகார்ட் பண்ணி யூஸ் பண்ணிக்குங்க.
.
கங்கட்: இங்க எக்ஸ்ட்ரா வாயசைச்சத லிப் சிங்க் பண்ணனும்!அதுக்கு மம்பு
பாத்ரூம்ல டப்பிங் பேசி அனுப்புன ஆடியோவை அதுல ஒட்ட வக்கணும்!அது பத்தாதுன்னு
க்ளோசப் ஷாட் எல்லாம் பேஸ் டைம் ரெகார்டிங் வச்சி முடிக்கணும்!ஸ்ஸ்ஸ்ஸ்....சப்பா!இன்னக்கி
பேக்கப்!வழக்கம் போல மில்லி ஊத்துனாத்தான் சரியா வரும்!
கிரேம்ஜி:ஆடியன்சை எவ்வளவோ டார்ச்சர் பண்ணிட்டோம்!இதை பண்ண மாட்டமா?
.
தயாரிப்பாளர்: (தலையில் துண்டோடு) அடேய் அவன் என்னடான்னா ஸ்பாட்டுக்கே
வர மாட்றான்!இவன் என்னடான்னா ஆறு மணிக்கு வந்துட்டு ஏழு மணிக்கு ஜூட் விட்டுட்டான்!அப்போ சாமிப்படம்
முன்னாடி சத்தியம் காண்டிராக்ட் பேப்பர்ல கையெழுத்து எல்லாம் சும்மாவாச்சுகுமா!
.
*********************************************************************************
அடுத்து பஞ்சித் இயக்கி
கார்யா நடிக்கும் படத்தின் ஸ்பாட்....
.
பஞ்சித்: நீங்க இப்ப இன்னா பண்றீங்கன்னா.....
கார்யா:அன்னா மச்சி?இப்ப நா நார்த் மட்ராஸ் ஏரியாவுல வாழுற
கேரக்டர்.பாக்ஸர்.லேண்ட் இஸ் அவர்ஸ்...க்ளைமேக்ஸ்ல ஒரு டுப்பாக்கி குண்டு!கரக்ட்?
.
கஞ்சித்: அதானுங்க!இன்னா நா சொல்றதுக்கு மின்னாடியே கரீட்டா
சொல்றீங்கோ!அசிஸ்டன்ட் யார்னா கத சொன்னாங்களா?
.
கார்யா: இல்ல மச்சி!உன்கிட்ட இருக்குற ஒரே கத அதான?
.
கஞ்சித்: இன்னாதிது!நம்ம தொழில் ரகசியத்த
அக்கூரேட்டா புரிஞ்சி வச்சிகிறாரு?இவராண்ட இனிமே உசாரா இருக்கோணும்!
.
*******************************************************************************************************************
.
*******************************************************************************************************************
அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றோம்!
.
இருளோ என்று
இருக்க அறையின் மூலையில் ஒரு கேமரா ஓடிக்கொண்டிருக்க
லைட்பாய், கேமராமேன், டைரக்டர், நடிகர் என்று எவரையும் காணாததால் சற்று
பீதியடைந்து அங்கிருந்து ஜூட் விட எத்தனித்த நிலையில் கூரையில் இருந்து ஒரு குரல்!
ஆஸ்கர்!ஆஸ்கர்!ஆஸ்கர்!
ஓ!விவரம் புரிந்தவாறு நாம் அண்ணாந்து பார்க்க அங்கு கம்பிகள் உதவியோடு
மூர்த்திபன் தொங்கியபடி இன்னொரு கேமராவை கீழ்நோக்கி போகஸ் செய்தவாறு
கையசைக்கிறார்!
மூர்த்திபன் :இந்த முறை என்ன வித்தியாசம்னா....
உதயா: நீங்க சொல்லாமலே தெரியுது!எந்த நடிகர் நடிகையுமே இல்லாம ஒரு
படம்!
மூர்த்திபன் :அதே!ஆஸ்கர் நிச்சயம்!தங்க கரடி லட்சியம்! என்றவாறு போகசை
அட்ஜஸ்ட் பண்ண நாம் வெளியேறுகிறோம்!
*************************************************************************************************************************கடைசியாக
போகேஷ் ஜனகராஜ் இயக்கி அண்ணா நடிக்கும் பாஸ்டர் பட ஸ்பாட்!
அண்ணா:
இன்னா நீ சொல்லு
நா வந்தா தில்லுகாலுல முள்ளுபோவாத நீ தள்ளு
என்று முனகியபடி இருக்க...
போகேஷ்: அப்படியே உங்க மகன்..
அண்ணா: மகன் வேண்டாம்!மகள்னு வய்யி!அப்பத்தான் செண்டிமெண்ட் பலமா
ஒர்க்கவுட் ஆகும்!
போகேஷ்: சரிங்ணா!உங்க மகளை நீங்க பாத்து பத்து வருஷம் ஆகுது!இந்த
பத்து வருஷம் நீங்க கஞ்சா கடத்தியதால் உள்ள போயிட்டீங்க!
அண்ணா: அட என்னைய்யா!சும்மா ஜெயிலு விலங்கு நொய்யின்னிட்டு!!வேணாம்!காலேஜ்
அட்மாஸ்பியர் போ!
போகேஷ்:ஆங்!சரிங்!நீங்க காலேஜ் ப்ரொபசர்!ஆனா டை கட்டி ஷூ போட்ட
ப்ரொபசர் இல்ல!அழுக்கா கருப்பா கலீஜா வந்து...... அப்படி டெரரா நிக்குற ப்ரொபசர்!
அண்ணா:ஆங்!இது ஓகே!அப்படியே மேல போ!
போகேஷ்: நீங்க தினம் புல்லா ஏத்திகிட்டு கிளாஸ்ல குட்டி கத சொல்றது
வழக்கம்!அதுக்கு பயந்துகிட்டே எவனும் க்ளாஸுக்கு வர மாட்றான்!
அண்ணா: ஆங்!இங்க ஒரு சாங்!அது எல்லாருக்கும் தெரியும்!மேல போ!
போகேஷ்: இதனால காலேஜ் நிர்வாகம் உங்கள சஸ்பென்ட் பண்ணுது!இது தெரிஞ்சி
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொதிச்சி எழுறாங்க!
அண்ணா: அதான் நா கிளாசே எடுக்காம அறுக்குறேன்!அப்புறம் எதுக்கு
இவனுங்க கூவுறாங்க?
போகேஷ்: நீங்க கிளாசே எடுக்காம அறுக்குரதால தான் அவங்க அந்த நேரத்துல
ஜாலியா கேண்டீன்ல அரட்டை இன்னும் ரெண்டு அவர் கட் பண்ணிட்டு சினிமானு இருக்காங்க!வேற வாத்தியார் வந்து கிளாசை
ஒழுங்கா எடுத்தா இதெல்லாம் முடியுமா?
அண்ணா: ஆங்!பாயின்ட்!இப்ப ஒரு பெரிய உள்ளிருப்பு போராட்டம்!எனக்காக
மாணவர் தலைமையில்!இல்லையா?
போகேஷ்:ஆமாங்ணா!
அண்ணா: அப்படியே பாகிஸ்தான்ல இருக்குற நாப்பதாயிரம் தீவிரவாத முகாமில்
இருக்கும் எல்லா அப்பாவிக்கும் இங்க க்ரீன் கார்டு கொடுக்கணும்னு குரல்
கொடுக்குறேன்!கொடுத்த மேனிக்கு...
இருவிரல் கிருஷ்ணாராவ்!ஆகிடுச்சே நாடு (இ)ராவ்!உட்டுகினேன் நா ராவ்!ப்ரோபசரில் நான் வாவ்!
இப்படி ஒரு பாட்டு அப்படியே மழை எபெக்ட்ல!ஈரோயினிக்கு வேற எந்த சீனும்
இல்ல!அதனால இந்த பாட்டுல கூட ஆடுறாப்ல!
போகேஷ்: சரிங்ணா!
அண்ணா: அப்படியே அடுத்த சீன்ல டெல்லிக்கு போறோம்!அங்க நான்!எதிர்ல க்ரம்ப்!
போகேஷ்: அவரு எப்படி?
அண்ணா: அது அப்படித்தான்!ரெண்டே நிமிஷம் பேசுறேன்!க்ரீன் கார்ட்
இல்ல ரேஷன் கார்ட் கூட கிடையாது என்கிறார் க்ரம்ப்!!எல்லாரும் என்னை
அமெரிக்க அதிபர் தேர்தல்ல க்ரம்ப்க்கு எதிரா போட்டியிட சொல்றாங்க!நா மறுத்து “க்ரீன் கார்ட் கண்டிப்பா
கொடுப்பேன்!தீவிரவாதிகளுக்கு மூணு வேலை பிரியாணி போட்டு கைகால் அமுக்குவேன்” என்று
உறுதியளிக்கும் பர்னி பாண்டரஸ்க்கு வாய்ஸ் கொடுக்குறேன்!அவர் ஜெயிக்கிறார்!அமெரிக்காவே என்னை
தலைல வச்சிக்கிட்டு கொண்டாட திரும்ப நான் கிளாஸ்ல குட்டி கத சொல்ல ஆரம்பிக்க.....
அப்படியே ஃப்ரீஸ் பண்ணி முடிக்கிறோம்!
No comments:
Post a Comment