ஷாகாஹாரி (சைவம்).படத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு (சைவ) மெஸ்ஸில் தான் நடைபெறுகிறது.அவ்வகையில் யோசித்துப்பார்த்தால் ஒருவகையான அவல நகைச்சுவையாகவே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது!
அனாதை இல்லத்தில் தன்னுடன் வளர்ந்த ஆருயிர் நண்பன் விஜய்க்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறான் ஹர்ஷா.இது நிதானமாக முடிவெடுத்து செய்த ஒரு செயல்.
ஏற்கெனவே ஒருமுறை கருக்கலைப்பு நடந்ததில் சோர்ந்து போன மனைவி கிராமத்திற்கு மாறுதலாகி வந்த கணவனுடன் இருக்கையில் அந்த சூழல் ஒப்புக்கொள்ளாமல் மூச்சுத்திணறல் வலிப்பு என்று படுத்து விட்டார்.அவருக்காகவே வேறொரு இடத்திற்கு மாறுதல் கேட்கிறார் மல்லிகார்ஜுன்.மாறுதல் கூடிவரும் வேளையில் ஒரு வழக்கு.ஒருபுறம் மனைவியை கவனித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி .மற்றொரு புறம் வழக்கை முடித்த பிறகுதான் பணியிட மாறுதல் என்ற துறைசார் நெருக்கடி!வழக்கை விரைந்து முடிக்க எண்ணி எடுத்த ஒரு முடிவு .இது அவசர கதியில் எடுத்த முடிவு.
இந்த இரண்டு செயல்களும் அந்தந்த முடிவுகளுடன் சம்மந்தப்பட்டவர்கள்/படாதவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் சலனங்கள் சுனாமிக்கள் தான் படம்.
படத்தின் முக்கிய மற்ற இரு கதாபாத்திரங்கள் கதை நடக்கும் அந்த கிராமம் மற்றும் மெஸ்!மலையாள படங்களில் ஒரு கிராமம் அல்லது சிறு நகரம் கதையின் ஆணிவேராக இருக்கும். கும்பளங்கி நைட்ஸ்,மகேஷின்டே பிரதிகாரம்,அங்கமாலி டைரீஸ் என்று பல படங்களை சொல்லலாம்.அதுபோன்று இப்படத்தின் ஆணிவேர் கதை நடக்கும் கிராமம்.ரகஷித் ஷெட்டி படங்களில் கடலோர கர்நாடக நிலப்பரப்பு கதையின் போக்கில் பெரும் பங்காற்றியது போல இதில் ஒரு மலைசூழ் கிராமம்.
Naked(1993) படத்தில் ஜானிக்கும் எதோவோரு நிறுவனத்தின் காவலாளிக்கும் நடக்கும் உரையாடல் மிகுந்த நெகிழ்வைத்தரும் ஒன்றாக இருக்கும்.
குண்டடி பட்ட விஜய்க்கும் சுப்பண்ணாவுக்கும் மெஸ்ஸில் நடக்கும் அந்த உரையாடல் அத்தகைய உணர்வைத்தந்தது.
.
விஜய் : நான் உங்களை எல்லாம் காப்பாத்த வேண்டியது(BSF பயிற்சியில் இருக்கும் விஜய் ஒரு காரணத்திற்காக கிராமத்திற்கு வருகிறான்).ஆனா நீங்க என்னை காப்பாத்தி இருக்கீங்க.உண்மையில் நீங்கதான் வீரன்.
.
.
இது உரையாடலின் சிறு பகுதி மட்டுமே!
ஆங்!படத்தில் விஜய் கதாபாத்திரம் விருப்பத்தின் பேரிலேயே எல்லை பாதுகாப்பு படையில் சேர்கிறான்.வெட்டியாக ஊரை சுற்றிவிட்டு...... "திடீரென்று பொறுப்பு வந்த டெம்ப்ளேட்" இதில் இல்லை!நன்று!
"கல் உடைந்தால் மண்ணாகும்.மனம் உடைந்தால் இதயமே கருங்கல்லாக மாறிவிடும்" என்று பட்டர் சொல்லும் மற்றொரு வசனத்தையும் குறிப்பிடலாம் .
படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எளிமையான ஆசைகள் கனவுகள்.ஆனால் விளையாட்டுக்காக கட்டிவைத்த சீட்டுக்கட்டு மாளிகை கண்ணெதிரே கலைந்து விழுவதை பார்ப்பதைப்போல் அவரவர் வாழ்க்கை கண்ணெதிரே சிதைந்து நொறுங்குவதை கதையின் கதாபாத்திரங்கள் கையறு நிலையில் செய்வதறியாது காண்கிறார்கள்!
பெங்களூர் ரங்கநாத் 'கண்ணிவெடி கார்த்திகேயன் " மீது சொன்ன அந்த "வெயிட்"டான குற்றசாட்டு பலருக்கும் மறந்திருக்காது!அந்த படத்தில் பயந்த சுபாவமுள்ள அதே நேரத்தில் வில்லங்க வேலைகள் செய்யும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன் கேரக்டரை செய்தவர் இதில் முற்றிலும் வேறான ஒரு கதாபாத்திரத்தை செய்துள்ளார்!குப்பி படத்தில் ஒற்றைக்கண் சிவராசன் கேரக்டரில் ரவி காலே அட்டகாசமாக நடித்ததையும் மறக்க முடியாது!
அந்த வழக்கறிஞர் கதாபாத்திரம் மிக விநோதமான தன்மைகளுடன் காட்டப்பட்டாலும் அவர் சட்டென்று காணாமல் போகிறார்!அந்த கதாபாத்திரம் பெரிதாக எதோ செய்யப்போவது போல பில்டப் கொடுத்தது அனாவசியம்!
No comments:
Post a Comment