Thursday, 15 September 2011
Saturday, 10 September 2011
நாகேஷும் தேசிய விருதும்
நாகேஷ் போன்ற ஒரு நடிகரை நாம் பார்க்க முடியாது!!ஆனால் அவருக்கு அரசு ஒரு அங்கீகாரமோ விருதோ கூட வழங்காமல் அவரை நோகடித்தே சாகடித்தது!!ஆனால் அரைவேக்காட்டு நடிகர்கள் தனுசு போன்றவர்களுக்கு உடனே தேசிய விருதுன்னா அந்த விருதின் நமபகதன்மையை குலைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!
Monday, 5 September 2011
அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்
அரசு கேபிளும் சமச்சீர் கல்வியும்---ரெண்டுத்துக்கும் என்னைய்யா சம்மந்தம்னு கேட்டீங்கன்னா ரெண்டும் ஒப்புக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதுதான்!!அரசு
அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமென்ன?நிதி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் செலுத்திய ஒற்றை ஆதிக்கம்.கேபிள் தொழில் செய்வோரை மிரட்டியது உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகள்.சரி அரசு கேபிள் ஆரம்பிச்சீங்க அது ஒழுங்கா இருக்கான்னா இதுக்கு பழைய கேபிளே தேவல என புலம்பல் எழுந்ததுதான் மிச்சம்!!பின்ன ஜெயா+கலைஞர் குழும டி.விக்கள் மட்டுமே தெரிகிறது(இதைதான் காமராஜர் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றாரோ?).ஆக என் முதுகை நீ சொறி உன் முதுகை நான் சொறிவேன் கதைதான்!!ஆட்சி மாறினால் நீ ஜெயா டி.வி குழுமத்தை நிறுத்தாதே வேறு எதை வேண்டுமானாலும் நிறுத்திகொள் என்பதுதான் இதில் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி!!இதுதான் திராவிட அரசியல்!இதை நான் கண்டித்தால் உடனே மேலே ஏற வருகின்றனர்.
மேலும் அரசு கேபிளின் நோக்கம் பொது எதிரி(மாறன் பிரதர்ஸ்) சன் குழுமத்தை ஒழிப்பதா என கேட்டால் அதையும் மறுக்க முடியாது!சன் குழுமம் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் ஜெயலிதா கருணாநிதி இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும் என்பதை மறுக்க இயலாது!மேலும் அரசின் நோக்கம் அரசுக்கு வருமானத்தை பெருக்குவதா அல்லது தனியார டிஷ் டி.வி(டி.டி.ஹெச்) வியாபாரத்தை பெருக்குவதற்கா என சந்தேகம் எழுகிறது.ஏன்னா நாலு சேனல் மட்டுமே தெரியுது.இதுல 70 சேனல் தெரியுதுன்னு பத்திரிகைகள் எழுதுவது கேலிகூத்து!!இப்படி நாலு சேனலுக்கு 70 ரூவா வாங்குனா மக்கள் டிஷ டி.விக்கள்(இது பிராண்ட் நேம் இல்லை.பொதுவா டி.டி.ஹெச். ஐ சொல்றேன்) பக்கம் போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?அரசின் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தினால் நன்று!
Labels:
அரசு கேபிள்,
கருணாநிதி,
காமராஜர்,
திராவிட அரசியல்,
மாறன பிரதர்ஸ்,
ஜெயலலிதா
Subscribe to:
Posts (Atom)