படத்தைப்பற்றி பக்கம்பக்கமாக எழுதுதலோ குறியீட்டு ஆய்வோ செய்யப்போவதில்லை.படம் பார்க்கும்போது தோன்றிய சில எண்ணங்களின் பதிவாக மட்டும் ....
- ஒரு லைவ் மூவியை பார்க்கும்போது ஏதோ ஒரு நடிகரின் நடிப்பு நம்மை ஈர்க்கும்.லயிக்க வைக்கும்."ஆகா இத்தன நாளா நாம இவரை கண்டுகொள்ளாமல் விட்டுட்டமே" என்ற ஆதங்கம் பிறக்கும்.உடனே விக்கிலையோ IMDB லையோ இவர் நடித்த வேறு திரைப்படங்கள் என்னென்ன?அதில் சிறந்தவை எவை?போன்ற தகவல்களை பார்த்து பிற படங்களையும் பார்ப்போம்.
-அப்படியாக இந்தப்படத்தை பார்த்தபோது Fio கதாபாத்திரம் மிகமிக ரசனையாக உருவாக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.உடனே மனதில் Fio வாக நடித்தவர் வேறென்ன படங்களில் நடித்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்ற வினோதமான எண்ணம் ஒருகணம் தோன்றி பின் "ச்சே!இது அனிமேஷன் படம்லா!" என்ற சிந்தனை பிறகு தோன்றியது.இதுதான் படத்தின் இயக்குனரும் எழுதியவருமான (வரைந்தவர்!) Hayao Miyazaki ன் திறனுக்கொரு சான்று.
-Miayazaki பொறுத்தளவில் கணினி வரைகலை எல்லாம் எவ்வளவோ முன்னேறிவிட்டாலும் இன்னமும் கையால் ஒவ்வொரு காட்சியையும் வரைவதையே விரும்புபவர்.இவரின் இயக்கத்தில் வந்த Spirited Away மிக பிரபலமான படம்
-முதல் உலகப்போரின் போது விமானப்படையில் இருப்பவர் Porco Rosso.போரில் இவரின் அனைத்து சகாக்களும் கொல்லப்பட இவர் மட்டும் பிழைக்கிறார்.அந்தக்காட்சி வித்தியாசமான ஒன்று.அதாவது போரில் கொல்லப்பட்ட இவரின் சகாக்கள் அனைவரின் விமானமும் மேலுலகம் நோக்கி சென்று கொண்டிருக்க ஆர்வமிகுதியால் இவரும் அந்த விமானக்கூட்டத்தில் செல்ல முயற்சிக்க சாபத்தால் பன்றியாக மாற்றப்படுகிறார்.
-அனிமேஷன் படங்கள் என்றாலே அது குழந்தைகளுக்கானது மட்டுமே என்று எண்ணும் "வளர்ந்த குழந்தைகள்" பிற நாட்டைவிட நம் நாட்டில் அதிகம்.அந்தக்குழந்தைகள் இப்படத்தை பார்த்தால் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. ஒரு சீரியசான தொனி படம் முழுக்கவே உண்டு.ஆங்காங்கே அட்டகாசமான வசனம்..உதாரணத்திற்கு
"I'd much rather be a pig than a fascist" என்று போர்கோ சொல்லும் இடம்.
-1920 களின் இறுதியில் வந்த The great Depression கதைக்களத்தின் பின்னணியில் சொல்லப்படுகிறது.அதனால் விமான கட்டமைப்பு யார்டில் இருக்கும் ஆண் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிவிட முழுக்க முழுக்க பெண்களாலேயே போர்கோவின் சேதமடைந்த விமானம் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.
-குழந்தைகள் வன்முறை பிரியர்கள் என்பது அனைவரும் அறிந்ததே(அதை நான்தான் சொன்னேன்-முனியாண்டி).இப்படத்தில் பள்ளி குழந்தைகளை கொள்ளையர்கள் விமானத்தில் கடத்திக்கொண்டு போக வருகிறார்கள்.அப்போது குழந்தைகள் செம ஜாலியாக "ஹை நீங்க எங்கள கடத்த போறீங்களா?" என கேட்பதும் கடத்தப்பட்டு விமானத்திற்குள் இண்டு இடுக்கெல்லாம் தொங்கிக்கொண்டும், அங்கிருக்கும் துப்பாக்கி,கையெறி குண்டு மிஷின்கன் இவற்றை வைத்து விளையாடும் காட்சிகள் சிரிப்பை வரவைக்கிறது.குறிப்பாக கொள்ளையர்கள் போர்கோவின் விமானத்தை சுடும் போது அந்த மிஷின் கன்னை ஜாலியாக பிடித்துக்கொண்டு தொங்கும் காட்சி! :D
-கொரிய சீன ஜப்பானிய படங்களை ஸ்டார் மூவிஸ் ,மூவிஸ் நவ் போன்ற சேனல்களில் காண சகிக்காது .காரணம் அதில் எரிச்சலூட்டும் விஷயம் இங்குலீசு டப்பிங்தான்.என்னைப்பொறுத்தளவில் படம் எந்த மொழியில் எடுக்கப்பட்டதோ அந்த மொழியில் பார்ப்பதே படத்தோடு ஒன்ற மிகச்சிறந்த வழி.சப் டைட்டில் பார்க்க சோம்பேறித்தனம் படும் ஆசாமிகள் பற்றி நான் பேசப்போவதில்லை.
-இந்தப்படத்திலும் இங்குலீசு audio feed இருந்தாலும் நான் பார்த்தது ஜப்பானிய ஆடியோவில்தான்.குறிப்பாக ஜப்பானிய அனிமேஷன் படங்களில் எனக்கு மிக மிக பிடித்தது பெண்கள் மற்றும் குழந்தைகள்(டப்பிங்) குரல்கள்.வசனங்களை மிக வேகமாக அவர்கள் பேசுவதை கேட்பதே தனி ஜாலிதான்.அந்த ஒரு தொனி இங்குலீசு டப்பிங்கில் இருப்பதில்லை.

Fio |

Hayao Miyazaki |

Porco Rosso |