எலெக்ட்ரா பட ஷூட்டிங்கின் போது ஒரு நிமிடம் அமைதியாக
இருக்கும் எலிசபெத் பிறகு வாய்விட்டு சிரிக்கிறார்.படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறுகிறாள். அடுத்தநாள் படக்குழு தொலைபேசியில்
அழைக்கும்போது பணிப்பெண் அவள் அறைக்கு சென்று பார்த்தால் அவள்
விழித்துக்கொண்டிருந்தாலும் பதிலளிக்க மறுக்கிறாள்.மூன்று மாதங்கள் எல்லாவித
டெஸ்டுக்கு பிறகும் ஒன்றும் மாற்றமில்லை
She is perfectly healthy both psychically and mentally என்கிறார் டாக்டர்
மனதில் எந்த குறைபாடும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களை விட அதிக மனவலிமை கொண்டவராகவே அவர் உள்ளார்.அதனாலேயே அவரால் எந்தவித எதிர்வினையும் ஆற்ற மறுக்க முடிந்தது.
நர்ஸ் ஆல்மா அவளை கவனித்துக்கொள்ள பணியமர்த்தப்படுகிறார்.எலிசபெத்தின் complexity ஐ எதிர்கொள்ள முடியாது என்று முதலில் தயங்கும் ஆல்மா பிறகு டாக்டரிடம் சம்மதம் தெரிவிக்கிறாள் . மனவலிமை கொண்ட எலிசபெத்துக்கு நர்சின் சிக்கலற்ற
மேம்போக்கான விளையாட்டுத்தனமான பல்வேறு கனவுகள்(கணவன் குழந்தை மகிழ்வான வாழ்க்கை)
கொண்ட வாழ்வியல் பார்வை ரசிக்க வைப்பதாக
இருக்கிறது.அவளுக்கு அந்த எளிமை தேவைப்படுகிறது
நர்சுக்கு பலப்பல கனவுகள்!வேளையில் இருக்கோம்.Security உண்டு.கணவன் குழந்தை பிள்ளைகளை நன்றாக வளர்ப்பேன் ...எல்லாம் நன்றாக இருக்கும்! என்று கனவுகள்.
Alma |
கணவனின் கடிதத்தை எலிசபெத்திடம் படித்துக்காட்டுகிறாள் நர்ஸ்.திருமணம் பற்றி எலிசா
சொன்னதை மேற்கோள் காட்டிவிட்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்துபோகும் போது எனது பெல்ட்டை பிடித்து இழுத்தாயே!..... என்ற வாசகம் வாசிக்கப்படும்போது தனது பெல்ட் இழுபட்டதுபோல
நடுங்குகிறார் எலிசா.
the hopeless dream of being.not seeming to be,but being
எலிசபெத் இப்போது ஏற்றிருப்பது ஒரு வேடம்!வாழ்வின் அனைத்தும் மீதும் விருப்பம் அற்றுப்போன ஒரு வேடம்!வாழ்விற்கு எதிர்வினை ஆற்ற மறுக்கும் வேடம்!வாழ்வின் பிற அம்சங்கள் எப்படி இவளுக்கு சலித்துப்போனதோ அதுபோல இந்த வேடமும் ஒருநாள் சலித்துப்போகும்!அப்போது அவள் வெளியே வந்துதான் ஆக வேண்டும்!
life oozes in from all sides....you are forced to react.உனது எதிர்வினைகள் உண்மையா பொய்யா நீ சொல்வது உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் எவருக்கும் கவலையில்லை!
முதலில் ஆல்மா நர்ஸ் என்ற professional ரீதியிலேயே எலிசபெத்தை அணுகுகிறாள்.அது தோற்றதும் பெரிய நடிகை என்ற அண்ணாந்து பார்க்கும் அணுகுமுறைக்கு மாறுகிறாள்..அதுவும் தோற்றதும் தனது பெரும்பாலும் சலனமற்ற வாழ்வில் மிக அதிகபட்ச அதிர்வை உண்டாக்கிய ஒரு அனுபவத்தை எலிசபெத்திடம் சொல்கிறாள் ஆல்மா.மிக அந்தரங்கமான அந்த அனுபவம்.கடற்கரையில் முகம் தெரியாத பதின்ம வயது சிறுவனோடு உடலுறவு கொண்ட தருணம்!அதனால் கர்ப்பமானது;பிறகு தனது பாய் பிரென்ட் மூலம் கருக்கலைப்பு செய்த அனுபவத்தை பகிர்கிறாள்.
இப்படியொரு அந்தரங்கமான பகிர்வின் மூலம் எலிசபெத்தை கொஞ்சம் அவளால் நெருங்கவும் முடிகிறது.
நீங்கள் நானாக நொடிப்பொழுதில்
மாறிவிடலாம்!என்ன உங்கள் ஆன்மா மிகப்பெரியது! எங்கும் நிரம்பி வழியும் என்கிறாள் ஆல்மா.இதை சொல்லி முடித்ததும் படுக்கைக்கு போ!இல்லாவிட்டால் இங்கேயே தூங்கி விடுவாய் என்று அசரீரி போல ஒரு குரல் கேட்கிறது!அது யார் பேசியது என்பது
காட்டப்படுவதில்லை அதே வசனத்தையே நர்ஸ் திரும்ப தனக்குத்தானே சொல்கிறாள்!
நர்ஸ் உரையாடல்களை விரும்புபவள்.எதிரில் இருப்பவர் எதிர்வினை
ஆற்றினாலும் ஆற்றாவிட்டாலும் அதை கேட்டால் போதும் என விரும்புபவள்.She needs
someone to listen to her.தனது குறைபட்ட; அனுபவ முதிர்ச்சியற்ற ஆளுமையின் சிறு சிறு
மனவெழுச்சிகளால்கூட பெரிதாக பாதிக்கப்படுபவள்.அந்த பாதிப்புகளை உரையாடல்கள் மூலம்
பிறருக்கு உணர்த்த நினைப்பவர்!பார் என் வாழ்வும் எவ்வளவு சிக்கலுள்ளதாக இருக்கிறது
என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் முயற்சி.
டாக்டருக்கு எலிசபெத் எழுதிய கடிதத்தை போஸ்ட் செய்யப்போகும் ஆல்மா
ஆர்வம் தாங்காமல் அதை பிரித்துப்படிக்கிறார் .ஆல்மா பற்றித்தான் எலிசபெத்
எழுதியிருக்கிறார்.Its a lot of fun studying her!அந்த கடற்கரையில் நடந்த அந்தரங்க அனுபவத்தையும் கடிதத்தில் எழுதி இருக்கிறாள் எலிசபெத்.
எலிசபெத் வரும் பாதையில்
வேண்டுமென்றே உடைந்த கண்ணாடி துண்டுகளை போட்டு வைக்கிறாள் ஆல்மா.தனது மிக அந்தரங்கமான
ஒரு அனுபவத்தை வேறொரு நபரிடம் எலிசபெத் பகிர்ந்து கொண்டதற்கான கோபமா? அல்லது உடல்ரீதியான வாதைக்கு எலிசபெத் எப்படி எதிர்வினையாற்றுகிறாள் என்று பார்க்க விருப்பமோ? அல்லது இரண்டுமா?
கண்ணாடித்துண்டை மிதிக்கிறாள்
எலிசா.வலியில் சிணுங்கி ஆல்மாவை பார்க்கிறார்!எலிசாவின் பார்வை இப்போது
நிர்சலனமற்ற ஊடுருவும் பார்வையல்ல!எரிச்சல் கலந்த பார்வை!ஆல்மாவின் பார்வை இப்போது ஆழமற்ற,வாழ்க்கை குறித்த
பல்வேறு கனவுகளுடனான பார்வையல்ல!எலிசாவின் வெற்றுப்பார்வை!! படத்தின்
துவக்கத்தில் சினிமா துவங்கிய காலம் முதலான பல்வேறு சிறு காட்சி துணுக்குகள் காட்டப்படும்.இப்போது
மீண்டும் அந்த துவக்கம்!உடைதல்!ஆளுமை மாற்றம்!இதை விளக்குதல் மிக சிக்கலானது.அந்த
காட்சி உண்டாக்கும் பாதிப்பை வார்த்தைகளில் வடிக்கவே முடியாது
இந்த காட்சியில் ஆல்மாவின் பிம்பம் உடைந்து மீண்டும் ரீல் முதலிலிருந்து ஓடத்துவங்குகிறது.இப்போது ஆல்மாவின் மூலமாய்!
தனது மிக மிக அந்தரங்கமான ஒரு அனுபவத்தை டாக்டரிடம் கடிதத்தில்
தெரிவித்ததை சொல்லி கோபத்தின் உச்சத்தில் கொதிக்கும் வெந்நீரை எலிசபெத் மீது கொட்டப்போகிறாள் ஆல்மா! No Dont! என்று பதறுகிறாள் எலிசா.அவளது முதல் எதிர்வினை!தன்னை
சுற்றி எழுப்பப்பட்ட கோட்டையில் விரிசல்!ஆல்மா அதை மகிழ்வோடு ஒருவித திமிரோடு
பார்க்கிறாள்!உன்னை உடைத்துவிட்டேன் பார்த்தாயா? -பார்வை!
அந்த கண்ணாடியை எலிசா மிதித்ததன் பிறகு ஆல்மா மாறி மாறி காட்டப்படுகிறாள்.அதற்கு முன்வரை அவள் submissive ஆக ஒரு நடிகையை
மேல்நோக்கி பார்க்கும் தொணியில்,சகோதரிகள் இல்லாமல் வளர்ந்ததால் எலிசாவை சகோதரியாக
அன்போடு பார்க்கும் தொணியில்; தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளுதல் மூலம் எலிசாவிடம் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை தொணியில்தான்
இருந்தது.அந்த கடித்தத்தை ஆல்மா படித்ததன் பிறகு apprehensive ஆக எலிசாவை
பார்ப்பது,ஒருகட்டத்தில் dominating ஆக எலிசாவை உடைத்துப்பார்ப்பது, அடுத்த
நிமிடம் குளியலறையில் உடைந்து அழுவது என்று பெரும் பாறையை உடைக்க மாறி மாறி
அறையும் கடலலை போல காட்டப்படுகிறாள்.
எலிசாவின் கணவன் அழைக்கிறான்.ஆல்மா பதில் சொல்ல செல்கிறாள்.எலிசா என்று
நினைத்து "மகனிடம் எதை சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை" என்று பேசிக்கொண்டே
போகிறான்."நான் எலிசா இல்லை" என்கிறாள்.அவன் கண்டுகொள்ளவில்லை.அவள் பின்னாடி எலிசா
வந்து நிற்கிறாள் அப்போதும் கணவன் ஆல்மாவையே எளிசாவாக கண்டு பேசிக்கொண்டே போகிறான்
its all sham and lies –alma
"மகன் பிறந்த கதையை சொல்" என்கிறாள் ஆல்மா!முடியாது என்கிறாள் எலிசா.நானே
சொல்கீறேன் என்று சொல்லத்தொடங்குகிறாள்.ஒரு பார்ட்டியில் ஒருவர் எலிசாவிடம் "உங்களிடம் பணம் பேர் புகழ் எல்லாம் இருந்தும் தாய்மை இல்லையே?" என்று கேட்க அப்போது சிரிக்கும் எலிசா பிறகு அதை தீவிரமாக உணர்ந்து தாய்மை அடைகிறாள்.பிறகு
பயம்!பொறுப்புகள் கைகளை கட்டிப்போடும்; கடமைகள் தியேட்டரை விட்டு விலக நேரிடும்; மரணத்தின்
மீது; உடலின் மீது; வயோதிகம் மீது பயம்!
எந்தளவு பயம் என்றால் பிள்ளை வேண்டாமென்று பலமுறை அபார்ஷன் செய்ய முயலும் அளவு;பிள்ளை இறந்தே பிறக்காதா என்று ஏங்கும்
அளவு;பிள்ளை பிறந்தபின் அதை வெறுக்கும் அளவு!ஆனாலும் யார் யாராலோ வளர்க்கப்பட்டும்
மகன் எலிசா மீது பாசமாக இருக்கிறான்.இவளுக்கு மீண்டும் பயம்!அந்தளவு பாசத்தை
தன்னால் திருப்ப செலுத்த இயலாது என்ற பயம்!Cold and indifferent ஆக இருக்கும்
எலிசாவுக்கு மகனின் தூய அன்பை எதிர்கொள்ளவே முடியவில்லை!அன்பிற்காக ஏங்குவோர்
உலகில் இருந்தாலும் அவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தப்படும்போது அதை
கையாளத்தெரியாமல் போட்டு உடைத்துவிடுவார்கள்!!இந்த இயலாமைக்கு பயந்தே பலர் எந்த
வகையிலும் அன்பு தன்னை அணுகிவிடாதபடி ஒரு அரணை எழுப்பி வைத்திருப்பார்கள்.அன்பைப்பெறுதல் என்பதைவிடவும் மிக மிக கடினமானது அந்த அன்பை திரும்ப செலுத்துதல்!
தனது தாயை திரை மூலமாகத்தான் பார்க்கிறான் அந்த சிறுவன்.பிம்பங்களாக மட்டும்!
எலிசாவின் ஆளுமை;தனது
சொந்த ஆளுமை என்று மாறி மாறி உணர்வதின் வாதை ஆல்மாவை பிய்த்து எரிகிறது!You cant
get to me என்று துணிச்சல் தொணியில் எலிசாவிடம் சொல்கிறாள் ஆல்மா!அது உண்மையில்
துணிச்சலில் சொல்லப்பட்டதல்ல!கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயத்தை இழந்து கொண்டிருப்பதை
தடுக்க முடியாமல் போகிறதே என்ற இயலாமையின் வெளிப்பாடு.எலிசா என்ற மாபெரும்
ஆன்மாவின் வீச்சை எதிர்கொள்ள முடியாததன் அச்சம்.விடாது எலிசாவை அறைகிறாள்.முழுமையாக ஆட்கொள்ளப்படுகிறாள்! எலிசாவின் வேடத்தை ஏற்கிறாள் ஆல்மா!
படம் நெடுக மிக வலிமையான காட்சிகள்.அதற்கு பெர்க்மனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Sven Nykvist ன் ஒளிப்பதிவு உயிர்மூச்சாய் உள்ளது.கதாபாத்திரங்களின் தகிப்பை பார்வையாளன் உணர மிகப்பெரும் கருவியாய் அவரது ஒளிப்பதிவு உள்ளது.குறிப்பிட்டு சொல்லவேண்டிய மூன்று வலிமையான காட்சிகள் ஆல்மாவின் தலையை எலிசபெத் கோதும் காட்சி;கண்ணாடியை மிதித்ததும் ஆல்மாவின் முகத்திற்கு வரும் க்ளோசப்;இறுதியில் ஆல்மாவின் முகம் பாதி எலிசபெத்தின் முகம் பாதியாக மிரள வைக்கும் காட்சிகளை சொல்லலாம்!
படம் நெடுக மிக வலிமையான காட்சிகள்.அதற்கு பெர்க்மனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Sven Nykvist ன் ஒளிப்பதிவு உயிர்மூச்சாய் உள்ளது.கதாபாத்திரங்களின் தகிப்பை பார்வையாளன் உணர மிகப்பெரும் கருவியாய் அவரது ஒளிப்பதிவு உள்ளது.குறிப்பிட்டு சொல்லவேண்டிய மூன்று வலிமையான காட்சிகள் ஆல்மாவின் தலையை எலிசபெத் கோதும் காட்சி;கண்ணாடியை மிதித்ததும் ஆல்மாவின் முகத்திற்கு வரும் க்ளோசப்;இறுதியில் ஆல்மாவின் முகம் பாதி எலிசபெத்தின் முகம் பாதியாக மிரள வைக்கும் காட்சிகளை சொல்லலாம்!