Thursday 12 July 2012

அரசு கேபிள் யாருக்கு லாபம்?

கேபிள் ஒளிபரப்பில் தனியார்(குறிப்பாக பிரதர்ஸ்)monopoly ஐ குறைப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது அரசு கேபிள்.தடல் புடலான அறிவிப்பு.சென்ற ஆட்சியில் இது ஒரு மிரட்டல் ஆயுதமாகவே பயன்பட்டது(குடும்ப சச்சரவை சமாளிக்க).பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது
பின்னர் ஆட்சி மாற்றம் வந்தபின் நினைத்தது போலவே இது கொண்டுவரப்பட்டது
பொதுவாக  ஒரு நிறுவனம் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு காரணம் என்ன?லாப நோக்கின்றி மக்கள் சேவை ஆற்ற,அதில் வரும் லாபம்(ஒருவேளை இருக்குமானால்) அரசுக்கு சேர்வதன் மூலம் அந்த பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தலாம் போன்றவை சில..
ஆனால் இந்த கேபிள் தொழில் அரசுடைமை  ஆக்கபட்டதன் காரணம் என்ன?மக்கள் நலன் நிச்சயமாக இருக்க முடியாது(கேபிள் ஒளிபரப்பு தரத்தை பார்த்தாலே இது தெரியும்) லாபம் எப்படியும் வராது.முக்கிய காரணம் கேபிள் தொழில் ஒரு "பிரதர்ஸ்" கைப்பிடியில் இருந்ததால் அதை விடுவிக்க செய்யப்பட்டது என சிலர் சொல்லலாம்...நான் அதை மறுக்கிறேன்..
கேபிள் மூலம் நிரந்தரம் இல்லாத ஏன் நிரந்தரம் இல்லாத என சொல்கிறேன் என்றால் எல் சி டி பிளாஸ்மா போன்ற தொலைகாட்சி பெட்டிகளில் சாதாரண தரத்தில் (standard definiton) பார்த்தால் மிக கேவலமாக இருக்கும்.அதனால் இது போன்ற உயர் தொழில்நுட்ப டிவி பெட்டிகளை வாங்கும்போதே கண்டிப்பாக டிஷ் (குறிப்பாக High Definiton என்று சொல்லப்படும் உயர் துல்லிய ஒளிபரப்பு ) தேவை.அந்த மக்களை விட்டு விடுவோம்..சாதாரண CRT வகை டிவி பார்ப்போருக்கு எந்த ஒளிபரப்பி பார்த்தாலும் ஓகே.ஆனாலும் ஓரளவுக்கு தரம் இருந்தால்தான் அந்த வகை டிவி பெட்டிகளிலும் பார்க்க முடியும்.
இது  வரை ஒற்றை ஆதிக்கம் கேபிள்தொழிலில் செலுத்தி வந்தனர் பிரதர்ஸ்.அது தற்காலிக வருமானம்தான்.ஏனெனில் விலை குறையும் எல் சி டி டிவிக்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என ஆகி விட்ட நிலையில் மக்கள் அதை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை...மிக்கப்பெரிய திரை துல்லியமான ஒலி ஒளி இவற்றுக்கு நான் முன்னமே சொன்னது போல டிஷ்இருப்பதே சரி என மக்கள் நினைப்பர்.
 அதனால் நிரந்தர வருமானம் என சொன்னால் அது டிஷ் வாடிக்கையாளர் மூலம் வரும் வருமானமாகவே இருக்க இயலும்.
அதிலும்  குறிப்பாக "பிரதர்சின்" டிஷை ஏன் வாங்குவார்கள்?ஏனெனில் நம் மக்கள் கேபிள் வருதா என கேட்க மாட்டார்கள்...சன்டிவி வருதா என்றுதான் கேட்பார்கள் என்று ஒரு முதுபெரும் மொழி ஒன்று உண்டு.அதன்படி அனைத்து சன் குழும சேனல்களும் வருவது சன் டைரக்ட் திட்டத்தில்தான்.ஆக கேபிள் அவுட்டு சன் டைரக்ட் இன்....பிரதர்சுக்கு நிரந்தர வருமானம் செய்து தந்த கழக அரசு வாழ்க
மேலும்  அரசு கேபிளை சென்னைக்கு கொண்டு வர போகிறார்களாம்...பெரு  நகரங்களில் டிஜிடல் ஒளிபரப்பு மட்டுமே இருக்க வேண்டும் என கேடு விதிக்கப்பட்ட நிலையில் கேபிலாக இருந்தாலும் செட டாப் பாக்ஸ் வாங்க வேண்டும்.இதை மக்கள் விரும்புவார்களா?இந்த காசில் டிஷ் வாங்கிடலாம் என நினைப்பர்.பிரதர்சுக்கு செம கல்லா..ஹ்ம்ம்...என்னமோ போடா மாதவா