தொலைகாட்சி சீரிஸ்களுக்கும் திரைப்படங்களுக்குமான வேறுபாடுகள் பல உண்டென்றாலும் மிக முக்கியமானதாக நான் கருதுவது character establishment.2.30-3 மணி நேர திரைப்படத்தில் கதையோடு தொடர்புள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் பார்வையாளனுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்குள்ளான உறவு போன்றவைகளையும் சொல்லிவிட வேண்டும்(சில திரைப்படங்கள் அப்படி சொல்லாமலும் இருப்பதுண்டு).
தொலைக்காட்சி சீரிஸ்களில்
அந்த நெருக்கடியில்லை.நிதானமாக போகிற
போக்கில் ஒவ்வொரு
கதாபாத்திரமாக அறிமுகம் செய்துவைத்து
அவர்களின் தன்மைகளை
மேலோட்டமாக அல்லாமல் ஆழமாக
பதிவு செய்யமுடியும்.
லோரா பால்மர்
என்ற பெண் கொல்லப்படுகிறாள்.அதைத்தொடர்ந்து நடக்கும்
விசாரணையும் அதையொட்டிய சம்பவங்களுமே
ட்வின் பீக்ஸ்.
சாதாரணமாக ஒரு
கொலை அதைத்தொடர்ந்த விசாரணை
துப்பறியும் வேலைகள் போன்ற
கதைகளில் கொலை,வாக் த க்ரிட்,அட்டாப்சி,டெண்ட்டல்,டி என் ஏ அது
இதுவென்று பரபரப்பாக அடுத்தடுத்த
காட்சிகள் அமையும் .இதில் அப்படியில்லை.
கொலை அதை ஒட்டிய
விசாரணை என்பது காட்டப்பட்டாலும் அதைத்தாண்டி
ட்வின் பீக்ஸ் எனும்
சிறு நகரத்தில் வசிக்கும்
மக்கள்;அவர்களின் வினோதங்கள் மிக
சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது.
Mindful (ஜென் நிலை
என்ற வார்த்தையை தமிழ் இணையபோராளிகள் க்ளீஷே ஆக்கிவிட்டதால்
பயன்படுத்தவில்லை) ஆன எஃப்.பி.ஐ
அதிகாரி டேல் கூப்பர் அற்புதமான பாத்திரப்படைப்பு.டயான் என்ற
கற்பனை(??!!) கேரக்டரோடு தனது
வாய்ஸ் ரெகார்டரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை
பதிவுசெய்துகொண்டே
வருவது;பிளாக் காஃபி மீதான அலாதி
அலாதி பிரியம்;உண்ணும்போது ஒவ்வொரு வாய்
உணவையும் அலாதியாக ரசித்து
உண்பது.எந்தவொரு
நெருக்கடியிலும் டென்சன் ஆவதோ
கத்துவதோ அல்லாமல் மெல்லிய
சிரிப்புடனேயே பிரச்னையை அணுகுவது;கொலை
வழக்கை விசாரிக்க வந்த
இடத்திலும் சுற்றுசூழலை ரசிப்பது;
அது என்ன மரம்??
என்னவொரு காற்று?
என செம ரகளையான பாத்திரப்படைப்பு.நடித்த Kyle MacLachlan ம் பட்டையை கிளப்பியிருக்கிறார்.இவர் ஏற்கெனவே டேவிட் லின்ச் இயக்கிய Blue Velvet படத்தில் நடித்திருப்பது தெரிந்திருக்கும்.
டேவிட் லின்ச் எழுபதுகள் துவங்கி சில தியான முறைகளை பழகி வந்ததாக கேள்விப்பட்டேன்..அதாவது ஆழ்மனம் என்பது கடல் போலவும் அதில் வரும் ஐடியாக்கள் மீன்கள் போலவும் அவர் சொல்வதுண்டு..ஆழமான தியானம் மூலம் அந்த மீன்களை பிடிப்பதாக சொல்வார்..
அவ்வப்போது அவருக்கு வரும் வினோதமான கனவுகள்(டேவிட் லின்ச் படைப்பில் கனவுகள் இல்லாமலா!) தனிரகம்.
அனைத்து எபிசொடுமே நன்றாக இருந்ததென்றாலும் குறிப்பாக Zen, or the Skill to Catch a Killer எபிஸோடில், யார் குற்றவாளி என்பதை டேல் கூப்பர் கண்டுபிடிக்கும் முறை-"weird"! தொலைவில் ஒரு பியர் பாட்டிலை ஒரு பாறைமீது வைத்துவிட்டு போர்டில் சந்தேக நபர்களின் பெயர்களை வரிசையாக எழுதி ஒவ்வொரு பெயராக சத்தமாக படிக்க சொல்கிறார்.ஒவ்வொரு பெயர் வாசிக்கப்ப்படும்போதும் ஒவ்வொரு கல்லாக எடுத்து அந்த பாட்டிலின் மீது வீசுகிறார்.எந்த பெயர் சொல்லப்படும்போது கல் பாட்டிலின் மீது படுகிறதோ அவர்தான் குற்றவாளி என்பதாக அவர் நம்புகிறார்!

பொதுவாகவே ஒரு
ஆண் கொல்லப்பட்டால் அவ்வளவு
பரபரப்பு உண்டாவதில்லை.அதே ஒரு
பெண், அதிலும் இளம்பெண் கொல்லப்பட்டால் வதந்திகளுக்கும் கதையாடல்களுக்கும்
யூகங்களுக்கும் முடிவே இருக்காது .இதிலும் லோரா
பால்மர் என்ற மாணவி
கொல்லப்பட்டதும் பல யூகங்கள்
கிளம்புகிறது.அந்த யூகங்களும் அதையொட்டிய
மர்மங்களும்தான் கதையை முன்னகர்த்துகின்றன.
Laura Palmer |
லோரா
பால்மர் சீரிஸ்(சீசன்1) முழுவதுமே
காட்டப்படுவதில்லை.அவர்
எப்படிப்பட்டவர்?எப்படி
பேசுவார்?எப்படி நடப்பார் என்பதெல்லாம்
நமக்கு தெரிவதில்லை(பிற்சமயத்தில்
வேறொரு டபுள் அவரைப்போல
உடையணிந்து வந்தாலும்).தொடக்கத்திலேயே
அவர் பிணம்தான் காட்டப்படுகிறது. அவர் எப்படிப்பட்டவர்,அவரின்
ஆளுமை எத்தகையது என்பது
அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் ஏன் காதலனுக்குமே (லோரா இறந்தபிறகு அவரது தோழியிடம் "எனக்கே தெரியாமல் உன்னைத்தான் நான் காதலித்திருக்கிறேன்".. என்கிறான்) தெரியவில்லை.லோராவை
சுற்றியுள்ள அந்தவொரு மர்ம
பிம்பம் அதுதான் இந்த மொத்த
கதையின் அடிநாதமாக நான்
பார்க்கிறேன்.பல்வேறு layer களை
கொண்ட ஒரு பெண்ணாகவே
அவர்(அதாவது அவர் பிம்பம்)
காட்டப்படுகிறார்.
அதைத்தவிர்த்து பல விசித்திரமான
மக்கள்.இதில் மிகவும் ஈர்த்தது Lucy Moran தான்.வினோதமான குரல்,ஹேர் ஸ்டைல் ஒவ்வொருமுறையும் ஒரு அரையோ பொருளோ எங்கிருக்கிறது என்பதை சளைக்காமல் விவரிக்கும் விதம் என நன்றாக நடித்துள்ளார்..
Drapes வடிவமைப்பில் ஏதாவது புதிதாக கண்டுபிடித்துவிட வேண்டும் எனத்துடிக்கும் eccentric ஆன ஒரு மனைவி கேரக்டர் ;
Lucy Moran |
Drapes வடிவமைப்பில் ஏதாவது புதிதாக கண்டுபிடித்துவிட வேண்டும் எனத்துடிக்கும் eccentric ஆன ஒரு மனைவி கேரக்டர் ;
மகளின் சவப்பெட்டி மேல்
படுத்துக்கொண்டு எழுதுகொள்ள மறுத்து
கதறுவதும் பிறகு புத்தி
கலங்கி பார்ட்டிகளில் வந்து சம்மந்தமில்லாமல் கற்பனையாக
லோராவோடு டான்ஸ் ஆடும்
லோராவின் தந்தை லீலன்ட் பால்மர் ;லோராவின் காதலனாக அறியப்பட்ட ஜேம்ஸ் லோராவின் mutual தோழியான டோன்னாவை காதலிப்பது ;கையில் இருக்கும் மரத்துண்டை உயிருள்ள பொருளாக கருதும் log lady என்று ரொம்ப diversified கதாபாத்திரங்கள்.
சீரிஸின் மிகப்பெரும் பலம் Angelo Badalamenti ன் இசைதான்.எனக்கு மிகமிக பிடித்தது டைட்டில் இசை..அதனோடு காட்டப்படும் சில (சர்ரியலிச??)காட்சிகள்..பழைய இசை/பாடல்கள் பழங்காலத்து நினைவுகளை கண்முன் கொண்டுவருவதும்..புது பாடல்கள் சமீபத்திய நினைவுகளை ஞாபகப்படுத்துவதும் இயல்பு.ஆனால் இந்த இசை சமீபத்திய ஒரு நிகழ்வினை தொடர்ந்து நினைவுபடுத்துகிறது..
ஜோஸியின் மில் தீவைக்கப்படுவது; ஏஜென்ட் கூப்பர் மர்ம மனிதனால் சுடப்படுவது;
தப்பிக்க முயலும் ____ கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்படுவது..மகளை கொன்ற _____ ஐ தன் கையாலேயே கொல்லும் லோராவின் தந்தை என பல திருப்பங்களோடு சீசன் 1 முடிகிறது.

No comments:
Post a Comment