Wednesday, 22 March 2017

கோலிவுட் ரவுண்டப்!

கோலிவுட்டில் இப்போது என்னென்ன படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்டுடியோக்களை ஒரு ரவுண்டு வந்தோம்!அதில் கண்டவை கீழே...


முதலில் பழைய ஊத்தாப்பத்தை சூடாக்கி பேன்கேக்காக விற்கும் பட்லி பட ஷூட்டிங்.

                     பழைய முத்துன முகம் படத்தை இப்போது அண்ணாவை வைத்து முப்பதுமுகமாக ஃப்ரீமேக் செய்துகொண்டிருந்தார்.
அண்ணா: யார் பொரிச்சா பூமி அதிர்ந்து பொறி...சீ....யார் கடிச்சா பூமி பொரிஞ்சி...
பட்லி: அண்ணா இந்தப்படத்துல அந்த வசனமில்லை.நா தருண் இல்லடா டீலக்ஸ் பாண்டியன்..எங்க சொல்லுங்க பாப்பம்...
அண்ணா: தா நருண் இல்லடா டலேக்ஸ்...சீ..நா கருண் இல்லடா தீலக்ஸ்...
பட்லி: என்னங்ணா டங் ரோலாவுதா?பரவால்ல.டிஜிட்டல் கேமராதான்.நாள் பூரா கேமராவ ஓட விடுறோம்.நைட்டுக்குள்ளவாவது சரியா பேசிடுங்க..
அண்ணா: யார் தருண் பொரிச்சா....
.
நாம் நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகுறோம்!
.
அடுத்து கஜீத் பட சூட்டிங்.அல்ஜீரியாவில்.
பெருத்த சிவா: கல மொதல்ல ரேஸ் உடுற காட்சிய எடுத்துடுவோம்.
கஜீத்: ஹே மேன் டிடின்ட் யு சே திஸ் வாஸ் எ வில்லேஜ் சப்ஜெட்?தென் ஹவ் கம் தேர் வில் பி எ பைக் ரேஸ்?
பெருத்த சிவா: கல அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க!கதைக்கு சம்மந்தமோ இல்லையோ ஒத்த வீல்ல நீங்க பைக் ஒட்டுறாப்ல ஒரு சீன் இருந்தே ஆகணும்னு ரசிகர்கள் விரும்புறாங்க.
கஜீத்: இட்ஸ் ஓகே.இன் லாஸ்ட் பிலிம் ஐ வாஸ் எ ரோக்.சோ ஆப்வியஸ்லி இன் திஸ் பிலிம் ஐ ஆட் டுபி எ காப்.எம் ஐ கரக்ட்?
பெரு.சிவா: கரக்டா பாயிண்ட புடிச்சிட்டீங்க கல.வாங்க பைக் ரெடியா இருக்கு...
.
நாம் வெளியேறுகிறோம்.
.
அடுத்து நெற்றிமாறன் இயக்கம். வீசாரணம் சூட்டிங்.
           உள்ளே நுழைவதற்கு முன்பே ஐயோ!! அம்மா!!!ன்னு அலறல் சத்தம்.உள்ளே சென்று பார்த்தால் பட்டகத்தி கினேஷ்,போகி கோபு,பாளி கங்கட் மூணு பேரும் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருக்க நாலு ரோடு ரோலர் சைஸ் ஜிம் பாய்ஸ் போலீசு யூனிபார்மில் அவர்களை வெளுத்துக்கொண்டிருந்தார்கள்!
எவரிதே!நாக்கு தள்ளுதே!கலத்கா மத்கர்!எள்ளி நோடுத்தர என்று புரியாத பாஷையில் திட்டிக்கொண்டே....
நெற்றிமாறன்: ம்.அப்படித்தான்.ஏ போன தடவ ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு.இந்த முறை விடமாட்டம்லா.அப்படித்தான் நெஞ்சுல மிதிலே.விலாவுல குத்துலே.பத்தாயிரம் வோல்ட் ஷாக் குடுலே..
பட்டகத்தி கினேஷ்: அடேய் உனக்கு ஆஸ்கர் கிடைக்குதோ இல்லையோ நா அஸ்தி ஆவப்போறது நிச்சயம் என்று சொல்லியவாறே மயங்குகிறார்!
.
எங்க நம்மளையும் தொங்க விட்டுவிடுவார்களோ என்று பயந்து எஸ்கேப்!
.
கலன் பிமாரசாமி அஜய் கேதுபதியை வச்சு எடுக்கும் ஸ்பாட்.
அஜய் கேதுபதி: ஜி ஒரு நாளக்கி பத்து படத்துக்கு கால்ஷீட் குடுத்திருக்கேன்.ஒவ்வொரு படத்துக்கும் ஒருமணிநேரம்.நீங்க ஷாட் ரெடியானதும் சொன்னா நா இங்க வந்து தலைய காட்டிட்டு போய்டுறேன்.பக்கத்துல மூர்த்தி சுப்புராஜ் பட ஷூட்டுக்கு நேரமாச்சு அங்க போய் முடிச்சிட்டு வந்துடுறேன்ஜி.
கலன்: ஒகேஜி!
மூர்த்தி சுப்புராஜ்: இந்த படத்தோட டைட்டில் பிரதமி.அதாவது பிரதமராகும் ஒரு பெண்ணின் கதை.படத்துல நீங்க பொண்டாட்டிகிட்ட செமமாத்து வாங்குற கேரக்டர்.வாங்கி முடிச்சதும் "புருசனை தூக்கிபோட்டு மிதிக்குற எல்லா பெண்களுமே  பிரதமிதான்"னுசொல்றீங்க.
அஜய் கேதுபதி: ஜி வசனம் ரொம்ப லென்க்த்தா இருக்கு.பக்கத்துல கீனு பாமசாமி சூட்டிங் இருக்கு.அங்கமுடிச்சிட்டு இத பேசிடுறேன்.
.
அடுத்து விமலகாசன் இயக்கி எடிட் செய்து வசனம் எழுதி லிரிக் எழுதி பாட்டு பாடி டான்ஸ் ஆடி டிஆருக்கு போட்டியா நடிக்கும் சபாஷ் ராவு சூட்டிங்.
விமலகாசன்: யாரு அப்பாராவா உள்ளே வாங்கோ.
ராவ்:நேனு அப்பாராவ்  இல்லண்டி.நரசிம்மராவ்காரு.
விமலகாசன்: இங்கா இருந்துச்சே ஒரு வயல்!அது இப்போ எங்கோ இருக்குது?
ராவ்: நாக்கு தெள்ளிதே பாபு!வயல்னா எவுராச்சும் மினிஸ்டர் கிராப் பண்ணிருப்பாரண்டி!
விமலகாசன்: ஐயோ vial க்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாம இம்ச பண்ணுறானே!வெல் ஆகாசம்பட்டு சேஷாச்சலம் சொன்னதைத்தான்....
ராவ்: ஐயோ மீர விட்டுடு விட்டுடு..என்று பதறியடித்து ஓடுகிறார்!
 விமலகாசன்:நீ போய்ட்டா நாபயந்துடுவனா?அந்த  அப்பாராவ் ரோலையும் நானே செஞ்சிடுவேன்!வெல்...நீங்க யாருன்னு....
.

விமலகாசன் நம்மை பார்க்க நாம் எஸ்கேப்!
.
கஜினி நடிக்கும் 3.0 .பங்கர் பரபரப்பாக பெரிய மலையை செட் போட்டுக்கொண்டிருந்தார்.
அசிஸ்டன்ட்: சார் மூன் லைட்டிங்ல மவுண்டேயின் ஃபுட்ல ஒரு சாங்னு சொன்னீங்க.மூன் லைட் இல்லைங்க.இன்னிக்கி அமாவாச!
பங்கர்: அது பரவால்ல.ஆர்ட் டைரக்டர்கிட்ட சொல்லி ஒரு பெரிய மூன் செட் போட சொல்லு!ஸ்வீடன்ல ஒரு பத்தாயிரம் வாட்ஸ் ஸ்பெஷல் லைட் இருக்காம்.அதை ஆர்டர் பண்ணி இம்போர்ட் பண்ண சொன்னதா ப்ரொட்யூசர்கிட்ட சொல்லிடு
ப்ரொட்யூசர்:(தலையில் துண்டோடு)அடுத்து என்னப்பா?
அசிஸ்டன்ட்: ஸ்வீடன்ல ஒரு பத்தாயிரம் வாட்ஸ் ஸ்பெஷல் லைட் இருக்காம்...அதை...
 ப்ரொட்யூசர் தெறித்து ஓடுகிறார்!போங்கைய்யா நீங்களும் உங்க மெகா பட்ஜெட் படமும்!
.
அடுத்து புஷ்கின் இயக்கம் கப்பறிவாளன் சூட்டிங்.
குஷாலின் மூஞ்சிக்கு மேக்கப் போடும் மேக்கப் மேனிடம் புஷ்கின் "பாஸ் மூஞ்சிய யாரு காட்டப்போறா?காலுக்கு நல்லா மேக்கப் போடுங்க.படம் ஃபுல்லா காலத்தான் காட்றோம்!
புஷ்கின்: ஒகே ஷாட் ரெடி.
குஷால்: நானும் மதுரக்காரன்தாண்டா!
புஷ்கின்: பாஸ் எதுக்கு இவ்வளவு சத்தமா சம்மந்தமே இல்லாம வசனம் பேசுறீங்க?ஒன்னும் பேசாம அப்படியே நில்லுங்க.உங்க காலை மட்டும் சூட் பண்ணிக்கிறோம்.
குஷால்:தெரியாத்தனமா இவன் படத்துக்கு ஒத்துகிட்டோம்.ஒரு பன்ச் வசனம் பேச முடியலையே!ச்சே!No comments:

Post a Comment