ஆனால் படத்தில் பொருளாதார வேறுபாடுகள் காட்டப்பட்டாலும் அதைவைத்து பெரிய லெக்சர் கொடுக்காதது ஆறுதல்!
அவனுக்கு ஆபீஸ் போய் வருவது போல தினம் காதலியோடு ஜாலியாக சுற்ற வேண்டும்.சாப்பிட வேண்டும்.பேச வேண்டும்.அவ்வளவே.அதைத்தாண்டி திருமணம் சம்பாத்தியம் குடும்ப பொறுப்பு இதெல்லாம் எட்டிக்காய்கள்!
உண்மையில் அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு காதலியோடு குடும்பம் நடத்துவதை விடவும் இப்படி விட்டத்தை பார்த்து வேதனைப்படுவது அவனுக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது.அந்த வேதனைகளை அப்படியே தனது படைப்பிற்கான கச்சாப்பொருளாக மாற்றவும் அவன் தயங்கப்போவதில்லை!
அதில் பெரும் சறுக்கல்.இவன் பணக்காரனாக நடிக்க தனது கார் வீடு பணம் போன்றவற்றை கொடுத்து உதவிய நண்பனுக்கும் இவன் மேல் கடும் கசப்புணர்வு.
கடைசியில் பெண்ணின் தந்தைக்கு உண்மை தெரியவர இவனின் உறவை அவள் கத்தரிக்கிறாள்.இதிலும் அந்த பெண்ணிற்கு கடும் கசப்பு நிறைந்த நினைவுகளை விட்டு செல்லும் மற்றொரு (கா புருஷ்)கோழை தான் இவன்.
*************************************************
தனது உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்கிறான்.புனைப்பெயரில் பாடுகிறான்.அந்த குரலுக்கோ ஏகப்பட்ட ரசிக ரசிகைகள்!நாயகியின் வீட்டிலேயே டிரைவர் வேலை பார்க்கிறான்.பாடகணின் உண்மை அடையாளத்தை தெரிந்துகொள்ளத்துடிக்கும் நாயகி(தனுஜா).கடைசியில் எல்லாம் சுபம்! உத்தம் குமாரின் ஸ்கிரீன் presence படத்தின் பெரும் பலம்.மற்றொன்று இசை.
படத்தின் இசையமைப்பாளர் அவரே.தயாரிப்பும் கூட !
படம் பார்த்து முடித்ததும் சரிகமா யூ ட்யூப் சேனலில் இவரது பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேட்டு ரசித்தோம்.
No comments:
Post a Comment