புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை
என்ற சந்திரபாபு பாடலுக்கு இலக்கணமாய் நிஜ வாழ்வில் வாழ்வோர் பலர்..மிக அபூர்வ திறமைகளை கொண்டிருந்தாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் போவது சரியான நேரத்தில் உதவ பணமோ அல்லது பெரிய புள்ளி அல்லது வாரிசு என்ற உதவியோ இல்லாதது போன்ற பல காரணங்களால் திறமைசாலிகள் பலர் தமது திறமைகள் நிரூபிக்கபடாமலேயே சமூக அங்கீகாரமோ அல்லது பாராட்டோ பெறாமலேயே மாண்டு போனோர் பூமியில் பல கோடி...அப்படி ஒருவரின் கதைதான் சலங்கை ஒலி..
இந்த படத்தை பார்ப்பது இதுதான் முதல் முறை என்பதை ஒரு வித தயக்கத்துடனே சொல்லிகொள்கிறேன்.பார்த்தவுடன் அந்த தயக்கம் இப்படி ஒரு படத்தை இவ்வளவு வருடம் பார்க்காமல் போய்விட்டோமே என்ற வருத்தமாக மாறியது...எது எப்படி இருந்தாலும் படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆனாலும் இன்றும் மனதில் நிற்கிறது..
மேலும் இப்படத்தை பார்த்தபோது இரண்டு விஷயங்கள் தோன்றின .
முதல் விஷயம் கமல் தவிர இந்த படத்தில் வேறு யாராவது நடித்து நாட்டியம் ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற டெர்ரரான எண்ணம பயமுறுத்தியது(ரஜினி சத்யராஜ் விஜயகாந்த் போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை செய்து பாருங்கள்).இன்றும் கூட நாட்டியம் தெரிந்த ஒரு நடிகர் கமலுக்கு பிறகு (சூர்யா விஜய் தனுசு போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை செய்யவும்). பிரபுதேவா இருக்கிறார் என்றாலும் அவருக்கு நடிக்க தெரியுமா என்பது பெரிய கேள்வி..
இன்றைக்கு நடிப்பு என்றால் என்ன?சிக்ஸ் பேக்ஸ் காட்டுவதே..அல்லது லுங்கியை நடு ரோட்டில் தூக்கி கொண்டு ஆடினால் தேசிய விருது நிச்சயம்..
இப்போது ப்ளாகர் உலக அறிவுஜீவிகள் பலர் கமலை ஈயடிச்சான் காப்பி என்று விமரிச்ப்பதை ஒரு பேஷனாக கொண்டுள்ளனர்.அது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் முன்பொரு காலத்தில் அவர் பல நல்ல படங்களை தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. எண்பதுகளில் அவர் பின்பற்றிய அல் பசினோ உடல்மொழிகளை பின்பற்றாது நடித்த படங்களை அப்படி சொல்ல இயலும்.இது அப்படி ஒரு படம்.
சில வருடங்கள் முன்பு வரலாறு என்று ஒரு படம்..அதில் அஜீத் நடனமாடும் இன்னிசை அளபெடைய என்ற பாடல் திரையில் ஓடிகொண்டிருந்த போது நான் நண்பனிடம் கேட்டேன் "வாட் ஹீ இஸ் டூயிங்?" என்று கேட்டபோது தெரியலியேபா என சிவாஜி ஸ்டைலில் சொன்னான்...
கிராபிக்சில் சுற்றி சுழன்றாடுவதாக காட்டிய போது எனக்கு தலை சுற்றியது..
சரி எங்கயோ போய்ட்டேன்.சலங்கை ஒலி படத்தை என்றுமே ரீமேக் செய்ய முடியாது என்பது மட்டும் உறுதி(நிம்மதி கூட)
மற்றொரு விஷயம் இந்த படத்தின் முதுகெலும்பு இசை.பாடல் இசை மற்றும் பின்னணி இசை.ராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தால் லபோ திபோ என ஏதோ ஒரு இசையை பாடலை கொடுத்து படத்தை ஒழித்திருப்பர்.இந்த படத்திற்கு இசைக்காக இசையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது("வாங்கியது" இல்லை.அதெல்லாம் இப்போ சில அரைவேக்காடுகள் வாங்குவது போல அப்போது இல்லை)
வைரமுத்து (பிற்காலத்தில்)எதிர் கோஷ்டியில் சேர்ந்து ராஜாவை தூற்றாத சமயம் அது.
"உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக்கொண்ட பயணம்
நீ தொடங்கும்போது முடியும்
அது முடியும்போது தொடங்கும்"
என்ற வரிகளே அவரை பற்றி சொல்ல போதுமானது.
தனது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தும் தாய் மரணத்தால் புழுங்கி தவிப்பதில் மிளிர்கிறார்.தனது வாழ்நாள் முழுக்க திறமை அங்கீகரிக்க படாதவராகவே(கடைசியில் மேடையில் வீல் சேரில் உட்காரும்போது அவர் கேட்கும் கை தட்டல் ஒலிக்கு கண்ணீர் மல்க வணங்கி இறக்கிறார்.
நிஜ வாழ்வின் கொடூரங்களில் இருந்த தன்னை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து குடி என்னும் கற்பனை உலகிலேயே வாழ்கிறான் பாலு.அதுவே அவன் வாழ்வை அழிக்கிறது.
பி.கு: இப்படி எல்லாம் நடித்த கமல் இப்போது ஒரு Narcissist ஆக மாறி போனது நேரக்கொடுமைதான்!ஒலக சினிமாவை காப்பிடியடிப்பதை விட்டு விட்டு வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில்(அமிதாப் போல) நடிப்பது இவருக்கும் நல்லது சினிமாவுக்கும் நல்லது பார்க்குரவனுக்கும் நல்லது.
No comments:
Post a Comment