பொதுவாகவே வணிக சினிமாக்களின் ஆதார சுருதி என்னன்னா polarization.அதாவது படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில் "இவிங்க எல்லாம் அக்மார்க் நல்லவர்கள்.இவிங்க எல்லாம் அக்மார்க் கெட்டவர்கள்.நீ நல்லவனை வாழ்த்து, கெட்டவனை திட்டு" என்ற ரீதியில் நிறுவப்பட்டுவிடும்.ரசிகர்களின் மனப்போக்கும் அதே போலத்தான் செல்லும்.
உயிர்மை இதழில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியதாஅல்லது வேறு யாரோ எழுதியதா என்று நினைவில் இல்லை.ஆனால் அந்த quote நினைவில் இருக்கு, " அருவியில் குளித்துகொண்டிருக்கும் நாயகியிடம் சில்மிஷம் செய்யும் வில்லனை அடித்து துரத்திவிட்டு எம்.ஜி.ஆர். அதே செயலை செய்வார்".அதாவது நல்லவன் சில்மிஷம் செய்தால் அது ரொமான்சு.இதே வில்லன் (என்று நிறுவப்பட்டவன்) செய்தால் அது கிரிமினல் குத்தம்.இந்த விதியின் படி அமைந்த சினிமாக்கள் பல்லாயிரம்.
(spoiler alert) ஹாரி பாட்டர் நாவலில் எனதபிமான கதாபாத்திரம் புரொபசர் ஸ்னேப்தான்.கிட்டத்தட்ட ஏழு நாவல்களிலும் அவரை கொடூர வில்லன் ரேஞ்சுக்கு காட்டி கடைசியில் வந்த டுவிஸ்ட் மிக சுவாரஸ்யமானதும் மனதை உருக்குவதுமாக இருந்தது.அதான் ஒரு எழுத்தாளரின் பலம். திரைக்கதை ஆசிரியரின் பலமும் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்குவதே!
இந்த வகையில் இந்த polarity/polarization ஆகியவற்றை உடைத்த படங்கள் அவ்வப்போது வந்துள்ளன.அரிதாக தமிழிலும்.உதாரணமாக தமிழில் வந்த "நான்" ,"நான் அவனில்லை" போன்ற படங்களை சொல்லலாம்.நாயகன் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாத படியான செயல்களை செய்தவனை மையபடுத்திய படங்கள் இவை.
இந்த வரிசையில் ஒரு படம் என்றால் அது Ishqiya.பொதுவாகவே விஷால் பரத்வாஜின் படங்கள் மனித மனத்தின் இருண்ட பாகங்களை படம் பிடித்து காட்டும் தன்மையுடையவை.குறிப்பாக polarisation க்கு உட்படாத கதாபத்திரங்களே அவர் படத்தில் நிறைந்திருக்கும்.உதாரணமாக அவர் இயக்கிய Kaminey படத்தை சொல்லலாம்.இஷ்கியா படத்தை அவர் இயக்கவில்லை.அபிஷேக் சவுபே தான் இயக்குனர்.ஆனால் கதை திரைக்கதை மற்றும் வசனம் வி.பரத்வாஜ்.
இந்த படத்தில் இரண்டு திருடன்கள் ,அவர்களை துரத்தும் முஷ்டாக், இவ்விருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெண் கதாபாத்திரம்,அவளது கணவன் கதாபாத்திரம்,கணவனின் கூட்டாளி,சாதி "போர்ப்படை"யில் இணைக்கப்பட்ட பதினைந்து வயது "பெரிய மனுஷன்" ஆகிய அனைவருமே நல்லவன்/கெட்டவன் என்ற இரு துருவங்களில் அடையாளம் காணப்பட/காட்டப்பட முடியாதவர்கள்.அதுதான் இந்த படத்தின் ஆதார பலமே.
குறிப்பாக கிருஷ்ணா(வித்யா) கதாபாத்திரம் மர்மமான, எந்த நேரத்தில் எதை செய்வாரோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரம்.Kahaani படத்தில் கூட வித்யாவுக்கு இதே போன்ற "மர்மமான" ரோல்தான்.அதில் படித்த பெண்மணியாக வருவார்.இதில் படிப்பு வாசனையற்ற ஒரு கிராமத்து பெண்மணியாக வருகிறார்.கிராமத்து பெண்மணி என்றாலே ஒரு பாவாடை தாவணியை போட்டுகினு கழுத்து சுளுக்கும் வரை ஒரு புதரு மண்டிய ஒரு மூஞ்சியை பார்த்துகொண்டே செல்லும் மொக்கை தமிழ்ப்பட பெண்மணி அல்ல இவர்.இவருக்கு துப்பாக்கியை குறிபார்த்து சுட தெரிந்துள்ளது.வேன் ஓட்டுகிறார்.தன்னை நம்பி வந்த அர்ஷத் வர்ஸி மற்றும் நஸீர் ஆகியோருக்கு உதவுவது போல உதவி ஒரு கட்டத்தில் அந்த இரு கில்லாடி கிரிமினல்களையே டபுள் க்ராஸ் செய்கிறார்.இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் ஆரண்ய காண்டம் படத்தில் சுப்புவாக பார்த்திருக்கலாம் .
இந்த படத்தின் அச்சாணி போன்ற கேரக்டர்கள் மூவர்.அர்ஷத் வர்ஸி நஸீர் மற்றும் வித்யா பாலன்.மூவரில் ஒருவர் நடிப்பில் சொதப்பியிருந்தால் கூட படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி ஆகியிருக்கும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.மூவரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் அர்ஷத்&நஸீர்.இரவில் அவசரத்தில் வந்து தங்கிய நேரத்தில் அவர்கள் வித்யாவை சரியாக பார்க்காமல் தூங்கிவிடுகிறார்கள்.மறுநாள் காலையில் வித்யா ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்(பாடகி:ரேகா பரத்வாஜ்.விஷாலின் மனைவி).அதில் மயங்கும் நசீர் ரொமான்டிக்காக கண்ணாடியில் தன முகத்தை பார்க்கிறார்.வெள்ளை தாடி இருப்பதை காணும் அவர் அங்கிருக்கும் மை டப்பாவை எடுத்து தனது தாடியில் பூசி கருப்பு தாடியாக அதாவது "தனக்கு இன்னும் வயதாகவில்லை.காதலிக்க தயார்" என்று மறைமுகமாக கிருஷ்ணாவுக்கு புரிய வைக்கவே இந்த கூத்து.நசீர் காதலில் விழுந்ததை உணரும் போது வரும் அட்டகாசமான பாடல் இதோ::
இந்த பாடலின் இசை, பாடிய Rahat Fateh Ali Khan இன் குரல்,,பாடலை படமாக்கிய விதம் இவை எல்லாவற்றையும் தாண்டி பாடலில் அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நஸீர்..ஆகா..என்னவொரு அற்புதமான காம்பினேஷன்!!
ஆனால் உண்மையில் வித்யா அர்ஷதுடன் இருப்பதை நஸீர்
பார்க்க,அதனால் இருவருக்கும் சண்டை வர அதனால் அவர்கள் போட்ட கடத்தல் திட்டத்தில்(கிருஷ்ணாவின் கணவரின் கூட்டாளியை கடத்த திட்டம் போடுகிறார்கள்) மிகப்பெரிய சறுக்கல்.அந்த நேரத்தில் கிருஷ்ணா இவ்விருவரையும் டபுள் க்ராஸ் செய்கிறார்.அதன் பின் என்னானது என்பதை திரையில் பார்க்கவும்.
அதிள் ஒரு சுவாரஸ்யமான காட்சியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அதுதான் கிருஷ்ணாவின் கணவன் வர்மாவின் கூட்டாளி கேகே என்ற தொழிலதிபர் பற்றியது.அவரை கடத்த அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேர பிரகாரம் ஒரு போர்டில் எழுதுகிறார்கள் மூவரும்.அதில் கோவிலுக்கு சென்றுவிட்டு கேகே வேறெங்கோ செல்வதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.அவரை பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு பழைய ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இருக்கும் ஒரு கட்டிடம்.பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க.. கேகேயின் மனைவி மாடர்ன் டிரெஸ்சில் கையில் ஒரு கழியுடன் கணவனையும் அவன் கண்களையும் கட்டிபோட்டுவிட்டு masochism பாணி எழுச்சியை உண்டாக்கி கொண்டிருப்பதும் அதை அடக்க முடியாத சிரிப்புடன் பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து பார்ப்பதும் பின் அதை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இவ்விருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதும் இது புரியாமல் காலு விழிப்பதும் டிபிகல் விஷால் பரத்வாஜ் ஸ்டைல் .
மற்றபடி குறிப்பிடப்பட வேண்டியது இசை.ஏற்கெனவே இரண்டு பாடல்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.எனதபிமான விஷால் பரத்வாஜ்தான் இசை.அவரின் 7 Khoon Maaf பாடல்களை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இந்த படத்தின் பாடல்களும் அட்டகாசமானவை.இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்றார் விஷால்.அது மட்டுமல்லாது
Badi Dheere Jali பாடலுக்காக அவரது மனைவி அற்புதமான பாடகி ரேகா பரத்வாஜும் தேசிய விருது பெற்றார்.அந்த பாடல் இதோ:
பாமரத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் ரேகா..ராவன்(ஹிந்தி)படத்தில் Ranjha Ranjha பாடலை இவர் பாடியிருப்பார்.இதே பாடலின் தமிழ் வடிவத்தில்(காட்டுச்சிறுக்கி) அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார்.வின்னர் ரேகா தான்.இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு அது தெரியும்
மற்றபடி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற ஹார்ட் அட்டாக் வரவைக்கும் செய்திக்கெல்லாம் நான் முக்கியதத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தானே அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்.பார்க்கபோவதில்லை என்று முடிவெடுத்த படம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

4 comments:
அர்ஷத் வார்சியுடன் ஒப்பிட்டால் வித்யாவும் நசீரும் தங்கள் நடிப்புத் திறனை பல படங்களில் நிரூபித்தவர்கள். இருந்தும், சரியான வாய்ப்பு கிடைத்தால் நானும் கலக்குவேன் என்று நிரூபித்தார் அர்ஷத். அவர் சொல்லும் ஒரு வசனம்... "ஏன் பாஸ்.. உங்களுக்கு வந்தா காதல்.. எனக்கு வந்தா காமமா? " பிரமாதம்!
மிக அருமையான படம்.. அதுவும் அந்த பெரிய பாஸ் வரும் சீன்கள் எல்லாம் நகைச்சுவையிலும் பிரமாதப் படுத்தி யிருப்பார்கள்!
விஷால் பரத்வாஜ்.. ராக்ஷசன்.. ஒம்காராவில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.. ஸைப் அலி கான் நல்ல நடிகர் என்று நிரூபித்த முதல் படம்!
கிந்திப் பட இஸ்டோரிய டமில் காண்டி சொல்லிக்கினாக் கூட... ஒன்னுமே பிரிய மாட்டிகிதுபா... :-(
இர்ந்தலும் நல்லா சொல்லிக்கினபா...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
@Bandhu
அர்ஷத் வார்சி ஒரு protagonist ஆக நடிப்பதைவிட இது போல side kick கதாபாத்திரங்களை செய்வதே அவருக்கு பொருத்தமானது.ஏற்கெனவே முன்னாபாய் சீரியஸில் முன்னாவின் சைட் கிக்காக பட்டையை கிளப்பி இருப்பார்.மற்ற படங்களில் அவர் அவ்வளவாக ஜொலித்ததில்லை.ஓம்காரா ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அற்புத படைப்பு.இப்போது ஹேம்லட்டை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து கொண்டிருக்கிறார்.hope it rocks.
*
*
*
@முட்டா நைனா
இந்திப்படத்த மொதல்ல பாக்க சொல்ல அப்ப்டித்தான் இர்க்கும் நைனா..ரெண்டாவது படம் மூணாவது படம் பாக்க சொல்ல சரியாப்பூடும்.
Interesting review for an interesting movie.
Post a Comment