சரி...சரி..ஸ்லீப்பர் செல் வேலையை பார்த்தாச்சு இல்ல?மேட்டருக்கு வா - கும்மாங்கோ
ஆனால் அதற்கு முன்பே அவர் வேறொரு படத்தில் அட்டகாசமாக நடித்ததுண்டு!
ஊர் பஞ்சாயத்து என்றொரு படம் எடுத்ததை இயக்குனர் மகேந்திரனே காலப்போக்கில் மறந்திருப்பார்.இப்படத்தை எப்போதோ கேசட்டில் பார்த்த நினைவு.படத்தின் கதை காட்சியமைப்புகள் என்று சுத்தமாக எதுவுமே நினைவில் இல்லை!ஆனால் ஒன்றுமட்டும் நினைவில் மிகத்தெளிவாக உள்ளது.அது வெள்ளை சுப்பையா செய்த கேரக்டர்.
மம்மூட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை பார்த்த பிறகு தன்னையே சேதுராமையர் சிபிஐ என்று கருதிக்கொண்டு வாழும் ஒரு கேரக்டர்.நடை பாவனை பேசும் விதம் எல்லாம் அப்படியே மம்மூட்டி போலவே செய்திருப்பார் வெள்ளை சுப்பையா.ஆனால் விழலுக்கு இறைத்த நீராக திராபை படத்தில் சிக்கி இந்த நடிப்பு கண்டுகொள்ளப்பாடமல் போய்விட்டது!
***************************************************
A Ranjith Cinema:
**************************************************
Thuruthu Nirgamana:
வாழ்வின் மகத்துவத்தை உணராதவர்கள் இருப்பை பறித்துவிட்டு அதை அவர்களுக்கு உணர்த்தும் படங்கள் உண்டு.அந்தக்கால It's a wonderful life படம் தொடங்கி வினோதய சித்தம் வரையில் நிறைய உண்டு.வினோதய சித்தம் பார்க்கவில்லை என்றாலும் அதன் தெலுங்கு ரீமேக்கான Bro பார்த்ததுண்டு.
இப்படமும் அது போலத்தான்.தாய் தந்தையரின் மகத்துவத்தையும் காலத்தின் மகத்துவத்தை உணர்த்த அவனுக்கு மூன்று வாய்ப்புகள்.அவன் என்ன செய்தான் என்பது கதை.
படத்தில் முக்கிய கேரக்டர் நர்ஸ் வேடத்தில் வரும் சுதாராணி.ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியை போல இறந்தவர்கள் உலகத்தை கவனித்து கொள்கிறார்.அந்த வேடத்தை அவர் நன்றாகவே செய்துள்ளார்.பிறகு ஜீவன் கேரக்டரில் வரும் அச்யுத் குமார்.தற்கொலை செய்து மேலுலகத்திற்கு வந்தவர்.ஒருகட்டத்தில் எதற்காக நீங்கள் தற்கொலை செய்துகொண்டீர்கள்? என்று நர்ஸ் கேட்கும்போது ஆரம்பத்தில் சிரித்தபடியே பதிலை தேடுபவர் பிறகு அந்தக்காரணமே நினைவிலில்லை என்றதும் விழிக்கும் காட்சி நன்றாக இருந்தது.
ராஜ்.பி.ஷெட்டி ஒரு டாக்சி டிரைவராக கடும் கடன் நெருக்கடியில் தற்கொலைக்கு முயலும் ஒரு கேரக்டர்.பல இடங்களில் அமெச்சூர்த்தனமாக நடித்ததாக நமக்கு தோன்றியது!படத்தில் அவருக்கு பெரிய வேடம் இல்லையென்றாலும் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்துபவர் அவரே!
ஒரு மெசேஜ் சொல்வதை மையமாக கொண்ட படமென்றாலும் தொடக்கத்தில் இருந்தே மெசேஜ் என்று ஆரம்பிக்காமல் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் அதை செய்தது ஆறுதல் அளித்தது .
No comments:
Post a Comment