ஹே மின்னலே - மிக்ஸிங் சொதப்பல்!
இப்பாடலில்(லும்) அதுதான் நிகழ்ந்துள்ளது.ஸ்வேதா மோகன் குரல் தேவாவின் இசையில் பல பாடல்களைப்பாடிய மாதங்கியின் குரல் மாதிரி ஒலிக்கிறது.பாடல் நெடுக வரும் பீட்ஸ் பள்ளி/கல்லூரி கிளாஸ் மேஜையில் நான்கைந்து பேர் ஒருசேர கையால் தட்டியபடி பாடுவார்களே!அந்தமாதிரி ஒலித்தது!என்னய்யா இதெல்லாம்???
அறிவுஜீவி பிரகாசு இதுவரை இசையமைத்த பாடல்களில் உருப்படியாக மிக்ஸ் செய்யப்பட்ட பாடலை நாம் கேட்டதில்லை.
வீரத்தமிழன் மறத்தமிழன் என்றெல்லாம் தனக்குத்தானே பட்ட பெயர் சூட்டிக்கொண்டு பேஸ்புக் & எக்ஸ் தளத்தில் பிரகாசு குழாயடி சண்டை போடுவதை நாமே பார்த்துள்ளோம்!அப்படி நேரத்தை விரயம் செய்தால் பாடல்களின் ஒலித்தரம் இப்படித்தான் இருக்கும்!
அதிலும் தனது தாய்மாமன் மாதிரி சில்லல்லவா ,Ishq Bina என்று variable sound quality mixing எல்லாம் இந்த ஜென்மத்தில் பிரகாசால் நினைத்து பார்க்க முடியாது.எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாட்டின் ஒலித்தரத்தில் 10% பண்ணாலே பிரகாசுக்கு அது உலக சாதனைதான்!
**************************************************
ஒரு சினிமாக்காரன்:
கொலை செய்யப்பட்ட ஒருவர் குறித்து விசாரிக்க வந்த இடத்திலும் "ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு" என்பதாக அவர் கடலை போடும் காட்சி இருக்கே!அந்த பெண்ணிடம் எந்த ஊர் என்று கேட்டதும் மும்பை என்று அவர் பதிலளிக்க "ஆம்ச்சி மும்பை" என்று ஒருமாதிரி இழுத்து சொல்லும் காட்சி அல்டிமேட்! :D . (பழைய)எஸ்.ஜே.சூர்யா தோற்றார்! ;)
இதிலும் வினீத் பாடிய ஒரு பாடல் அட்டகாசம்.அவரின் இசை ரசனை குறித்து தனிப்பதிவு வரும்.
***************************************************
Johnny Gaddar:
அமிதாப் நடித்த Parwana படக்காட்சிகள் காட்டப்படுகிறது.அப்படம் குறித்த வசனங்களும் வருகிறது!ஆனால் இன்று நீங்கள் Parwana படத்தை பார்க்க முடியாது. பிரின்ட்டை காணோம்!இப்படம் வெளியிட்ட நேரத்தில் ஒரு உபகாரமாக கூடவே Parwana படத்தையும் remaster செய்து வெளியிட்டிருக்கலாம்!படத்தில் காட்டப்படும் Parwana காட்சிகள் அவ்வளவு துல்லியமாக இருந்தது!
No comments:
Post a Comment