தள்ளுமாலா படம் பார்த்தபோதே இப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைத்தோம்.பல பதிவுகளில் இப்படமும் அதுபோலவே சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அது ஒரு புறமிருக்க வேறொரு விஷயத்தை குறிப்பிட வேண்டும்.படத்தில் தற்காலமாக காட்டப்படும் ஆரம்ப மருத்துவமனை காட்சியில் ஒருவர் நோக்கியா N95 மூலம் பேசுவதை கண்டோம்.அப்போ 2005 /06 ஆக இருக்கும் என்று புரிந்தது.
பிறகு டிவியில் ஜெயசூர்யா விளையாடிக்கொண்டிருப்பதை காட்டியதும் "சரி..அப்போ கண்டிப்பா 96 க்குதான் போகப்போகிறார்கள்" என்று நினைத்தால் கதை 97 க்கு செல்கிறது.23.10.97 என்று மகிமா படிக்கும் காலேஜ் போர்டில் எழுதப்பட்டதை கண்டதும் cascading effect!!!!
பரணில் அடுக்கப்பட்டிருக்கும் சாமான்களை மொத்தமாக கீழே தள்ளிவிட்டது போல இருந்தது.நினைவுப்பரணில் அடுக்கப்பட்ட பல்வேறு விஷயங்கள் "இதெல்லாம் நினைவில் இருக்கா?" என்று நம்மையே ஆச்சரியப்பட வைத்தது விஷயங்களை கண்டுகொண்டோம்!
97 தீபாவளிக்கு தமிழில் பனிரெண்டு படங்கள் வந்தன!இப்போதும் ரசிக்கும் படம் தேடினேன் வந்தது! :D இப்போது போல ஒரே படத்தை ஆறாயிரம் திரைகளில் நிரப்பும் வேலைகள் அப்போதில்லை!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தியேட்டர்கள் உள்ள காம்ப்ளெக்ஸ் சென்றால் ஒன்று இரண்டு என்று நாமே வரிசைப்படுத்தி ஒவ்வொரு படமாக பார்த்ததுண்டு.
12- படங்களில் odd man out என்றால் வாசுகி தான்.விசு ஊர்வசி ஆகியோர் நடித்த அந்தப்படம் தமிழ்ப்படமா?தெலுங்கு படமா என்று இன்றுவரை நமக்கு புரியவில்லை.இப்படி குழப்பியடித்த மற்றொரு படம் அர்ஜுனின் நூறாவது படமான மன்னவரு சின்னவரு!
படத்தில் எல்லாரும்(அதாவது 97 இல்) பூப்போட்ட சட்டைகள் அணிகிறார்கள்.அதை பார்த்ததும் அண்ணா நியாபகம் :D
19.12.97 முதல் என்று காதலுக்கு மரியாதை போஸ்டரை(நிஜத்தில்) கண்டபோது ஷாலினி இடதுகையில் கிடாரை பிடித்து வாசிப்பது போல புகைப்படம் இருந்தது.ஆனால் படத்தில் வலதுகையில் வாசிப்பார்!போஸ்டரை திருப்பி அடித்துவிட்டார்கள்!
அக்டோபர் 97 இல் வந்த மற்றொரு படமான சாம்ராட் பற்றி ஏற்கெனவே நாம் பதிவிட்டுள்ளோம்.இப்போதுள்ள திடீர் ராம்கி கிரேஸில் அப்படம் பற்றி குறிப்பிடுவது நமது கடமையல்லவா? :D
தேவராகம் கேரளத்தில் இவ்வளவு பிரபலமான படமன்று நமக்கு இப்போதுதான் தெரியும்!"ஶ்ரீதேவி அரவிந்த் சாமிக்கு அக்கா போல தோற்றமளிக்கிறார்" என்ற ஒற்றை வரியில் தமிழகத்தில் படத்தை காலி செய்து விட்டார்கள்!
அப்புறம் கரணிசம்! 90ஸ் என்றாலே அண்ணாயிசம் & கரணிசம் இல்லாமலா?98 இல் வந்த சொல்லாமலே படத்தில் கரண் மைக்கேல் ஜாக்சன் போல ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு வருவார்(கொஞ்சம் பின்னாடி ஃபங்க் மிஸ் ஆகி இருந்தாலும்)!பிறகு தமிழ் சினிமா வழக்கம்போல அமெரிக்க மாப்பிள்ளை பல்பு வாங்கும் கதை தெரிந்ததே!அதே போல ஹேர்ஸ்டைல் இப்படத்தில் சேவியர்(நீரஜ் மாதவ்) வைத்திருந்தார்.
*
பைக் புராணம்:
அந்த காலனி சண்டைக்காட்சி அட்டகாசமாக இருந்தது ஒருபுறம் என்றால் அங்கே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் நம் கவனத்தை ஈர்த்தது சுசூகி ஃபியரோ மற்றும் சேவியர் தற்கால கதையில் பயன்படுத்திய 2001 மாடல் பல்சர்.பல்சர் அதன்பிறகு ஏகப்பட்ட டிசைன் மாற்றங்களை கண்டுவிட்டாலும் 2001 மாடல் மாதிரி வரவில்லை!எதிரி படத்தில் மாதவனும் விவேக்கும் மதன் பாபை ஏமாற்றி 2001 மாடல் பல்சரை தள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள்!
பஜாஜ் டிஸ்கவரில் வில்லன் கோஷ்டியில் ஒருத்தர் வருகிறார்.அப்போதைய மிடில் கிளாஸ் நாயகனான டிவிஎஸ் விக்டர் மிஸ்ஸிங்!
*
சமீப காலங்களில் வந்த எந்த மலையாள படத்தை பார்த்தாலும் ஒரு பாடலாவது மனதில் பதிந்து விடுகிறது.நீல நிலவே பாடல் அப்படியானது!
No comments:
Post a Comment