Sunday, 8 December 2024

ஆ ஆ அபர்ணா!

 

ஆ!ஆ!அபர்ணா!

ஹேராம் படத்தில் அபர்ணா (ராணி முகர்ஜி) கொல்லப்பட்டு கிடக்கும் நேரத்தில் சாகேத் ராம் (காசர்)இந்த வசனத்தை சொல்வார்.பத்து வருடம் முன்பே யோசித்து படம் எடுக்க கூடியவர் என்று அவரை சொல்வார்கள்.இந்த விஷயத்தில் இருபது வருடங்கள் முன்பே யோசித்து விட்டார்!

 
   சூரரை போற்று என்ற ஒலக சினிமாவில் பொம்மி(அபர்ணா பாலமுரளி) கேரக்டர் தெனாவெட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பி இருக்கிறார்.அதற்காக வசனம் பேசுவதற்கு முன்பும் பின்பும் வாயில் ஈ புகுந்தால் கூட தெரியாமல் இருக்கும்படி ஆ என்று வாய்பிளந்தபடி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ரோசனை சொன்னது யாரென்று தெரியவில்லை!இயக்குனர் யோசனையா? அல்லது கோவை சரளா மாதிரி "நானே ஜிந்திச்சேன்" என்று அபர்ணாவே யோசித்து நடித்தாரா என்று தெரியவில்லை.

 

    ஆனால் அதிலிருந்து அம்மணி நடிக்கும் படம் என்றாலே நமக்கு பயம் தான்.ஆர்வமாக தங்கம் படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது அதில் இவரும் உள்ளார் என்று தெரிந்து குலை நடுங்கியது.பிறகு மலையாள சினிமாவில் ஓவராக்டிங் செய்தால் மண்டையில் தட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் படத்தை தொடர்ந்தோம்.
    இப்போது கூட தூமம் படத்தை இரு காரணங்களுக்காக பார்க்க விருப்பம். ஃபஹத் மற்றும்  கிங்ஸ் லெவனை மையமாக கொண்ட கதை என்பதால்!ஆனால் இப்படத்திலும் அம்மணி இருப்பதால் இப்போதுவரை பார்க்கவில்லை.கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்க வேண்டும்!

அடுத்து புறநானூறு படத்தில் எந்த நடிகை ஓவராக்டிங் செய்ய போகிறாரோ
தெனாவெட்டா இருக்கணும்னா வாயை பிளந்துட்டு இருக்கணும்னு யார் சொன்னது

 

*************************************************
தெக்கு வடக்கு:

விநாயகன் நடித்த தமிழ்படத்தில் பிடித்த கேரக்டர் என்றால் மதுரை சம்பவத்தில் வரும் மண்டையன் தான்.திமிரு படத்தில் விஷால் ஷ்ரேயா ரெட்டி மாறி மாறி கத்திக்கொண்டு இருந்ததால் இவரின் நடிப்பை சரியாக ரசிக்க முடியவில்லை.ஆனால் மதுரை சம்பவத்தில் வரும் மண்டையன் சம்பவமான கேரக்டர் தான்.சுடுகாட்டு மண்ட! என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரியும் நாயகனின் நண்பன் வேடத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார்!

 

    இப்படம் பார்த்ததற்கு இரு காரணங்கள்
-விநாயகன் பிரதான வேடத்தில் நடித்தது& பட போஸ்டரில் வந்த Saturday night fever பட போசில் சுராஜ் (சூரஜ் அல்ல என்றொரு பதிவு பார்த்தோம்) மற்றும் விநாயகன் :D




      படத்தின் முதல் பாதியில் விநாயகன் பிரதானமாக வந்தால் இரண்டாம் பாதியில் சங்குன்னி (சுராஜ்) செய்யும் சேட்டைகள் "ரொம்ப ஓவரா போறமோ?சரி போய் பார்ப்போம்" என்ற வடிவேலு வசனம் மாதிரி கையில் டார்ச்சை எடுத்துக்கொண்டு மாதவன் (விநாயகன்) கேரக்டர் இறந்து கிடக்கும் வீட்டில் அவர் செய்யும் கூத்துக்கள் ரணகளம்!Iஇனி யார் டார்ச்சை கையில் எடுத்தாலும் இதான் நியாபகத்துக்கு வரும்! :D
   அது சிலருக்கு பிடிக்கும்.சிலருக்கு "இதையெல்லாமா காமெடியாக்குவார்கள்" என்று தோன்றலாம்!நாம் முதல் வகை (அதான் ஊருக்கே தெரியுமே! - கும்மாங்கோ) என்பதால் ரசித்தோம். :D

   அவல நகைச்சுவை விஷயங்கள் படத்தில் ஏராளம்.மேற்சொன்ன அந்த காட்சிகள் தவிர்த்து ஒரு நிலத்துக்காக இரு குடும்பத்தலைவர்கள் முப்பது ஆண்டுகளாக வழக்கில் முட்டிக்கொண்டு நிற்பது,தீர்ப்பு வரும் வேளையில் வழக்காடிய வக்கீலுக்கே வழக்கின் விவரங்கள் முழுமையாக மறந்துபோனது,மாதவன் அறுபது வயதில் மனைவி கொடுத்த வரதட்சணையில் ஐந்து பவுன் பாக்கி என்று அவரை பிறந்த வீட்டுக்கு அனுப்புவது,ஒருவழியாக தீர்ப்பு வந்து அதை மாதவன் கொண்டாடியது,கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் நடக்கும் அந்த அவலம்,தீர்ப்பு வந்த அன்றே மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியது,இறந்த பிறகு அந்த நிலத்தில் விடிய விடிய படுத்திருக்கும்  சங்குன்னி  நோய்வாய்ப்பட்டு மரணித்தல்,பிறகு அடுத்த தலைமுறை வாரிசுகள் முதலில் ஒற்றுமையாக இருப்பது பிறகு அவர்களும் அதே சர்ச்சைக்குரிய இடத்தில் அடிதடியில் இறங்குவது என்று தொடர் அவலங்கள்!
சிலருக்கு பிடிக்கலாம்.சி(ப?)லருக்கு இது பிடிக்காது.எப்படி இருந்தாலும் விநாயகன் மற்றும் சுராஜின் அட்டகாச நடிப்புக்காக பார்க்கலாம்!
-
***************************************************
Apaharan(2005):

பீகார் எப்படிப்பட்ட மாநிலம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே செல்லும் ரயில் பீகார் வழியாக செல்கிறது என்றாலே பயணிகள் நடுங்கி பார்த்ததுண்டு.இப்போது கொஞ்சம் நிலைமை மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.தெரியவில்லை.

 

    ஆனால் ஒரு காலத்தில் ஒரு அரசியல் தலைவரின் மகள் திருமணத்திற்காக கார் ஷோரூமில் இருந்த புது கார்களை தம்படி காசு கொடுக்காமல் அள்ளிட்டு வந்த கதையெல்லாம் உண்டு.ஆள் கடத்தல் சம்பவங்ககளுக்கும் பஞ்சமில்லை.

   அப்படியான ஆள் கடத்தும் கும்பல் அதிகார மையத்தோடு கூட்டணி அமைத்து செயல்பட்ட அவலத்தை இப்படம் காட்டுகிறது.படத்தின் முடிவு கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் அதிகார போட்டியில் சாமானியர்கள் வரை பகடைக்காயாக ஆக்கப்படுவதை படம் இயல்பாக சித்தரித்துள்ளது.

 
    இப்படம் பார்க்க முக்கிய காரணம் நானா படேகர்.ஆள் கடத்தல் செய்யும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வேடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். சின்ன சின்ன முகபாவ மாற்றங்களை எதிர்பாராத நேரங்களில் கொடுத்து அசரடிக்கிறார்!ஜெயிலில் இருக்கும் அஜய் சாஸ்திரி(அஜய் தேவ்கன்) யைப்பார்க்க வரும்போது அவர் ஸ்கிப்பிங் செய்து கொண்டிருக்க யாருமே எதிர்பாராத விதமாக சர்ரென்று அவரோடு சேர்ந்து ஸ்கிப்பிங் செய்யும் காட்சி அதகளம்!

 

    முகேஷ் திவாரி- போக்கிரி கந்தசாமி படங்களில் வில்லனாக வந்தவர் இதில் நல்லவர்.இவரை பார்க்கும்போது ஷைன் டாம் சாக்கோ தான் நினைவுக்கு வருகிறார்.அல்லது vice versa!தோற்றத்தில்!இவ்வளவு நல்ல நடிகருக்கு சரியான கேரக்டர்கள் கொடுக்காமல்/ஒரேமாதிரியான வில்லன் கேரக்டர் கொடுத்தே வீணடிக்கிறார்களே என்ற வருத்தம் ஏற்பட்டது!

     

No comments:

Post a Comment